O.S. Maniyan press meet: ஓபிஎஸ் ஓகே சொல்வாரு.. பாஜக மத்தியஸ்தமா? ஓப்பனாக பேசிய ஓ.எஸ். மணியன்!
இபிஎஸ்-ஐ முன்னிலைப்படுத்துவதன் அவசியம் குறித்து ஓ.எஸ். மணியன் ஓப்பனாக பேசியுள்ளார். மேலும் ஒற்றைத் தலைமையை ஓ. பன்னீர்செல்வம் ஏற்றுக் கொள்வார் என ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
ஒற்றைத் தலைமையை ஏற்று கொள்வார்:
ஓபிஎஸ் எப்போதும் சமாதானத்தை விரும்புகிறவர், ஒற்றை தலைமை பதவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஏற்று கொள்வார் என அதிமுக மூத்த தலைவர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
ஒற்றை தலைமை காலத்தின் கட்டாயம்:
தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பின் அதிமுக மூத்த தலைவர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒற்றை தலைமைக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒற்றை தலைமை காலத்தின் கட்டாயம், தேவை என அதிமுக தொண்டர்கள் நினைக்கின்றனர். வருகின்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் என ஓ.எஸ். மணியன் தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஓ.எஸ் மணியனின் அளித்த பதில்களை பார்க்கலாம்..
கேள்வி: உங்களுடைய ஆதரவு யாருக்கு?.
பதில்: உங்களுடைய ஆதரவு யாருக்கு என்று நீங்கள் கேட்க கூடாது, ஏனென்றால் இது உட்கட்சி பிரச்னை. இது குறித்து விவாதிக்க கூடிய இடம் கட்சி அலுவலகமே தவிர பொது இடம் அல்ல.
கேள்வி: தொண்டர்கள் எதிர்பார்ப்பு என்ன?.
பதில்: உங்களுக்கே தெரியும் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று.
கேள்வி: இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சி பிளவுபடுமா?.
பதில்: மிகப் பெரும்பான்மையோர் ஒற்றை தலைமையை விரும்பும் போது, அதை எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள்.
கேள்வி: ஓபிஎஸ் சமாதானம் ஆவதற்கு வாய்ப்பு குறைவா?
ஓபிஎஸ் எப்போதும் சமாதானத்தை விரும்புகிறவர்தான் ,ஏற்றுக் கொள்பவர்தான்.
பதில்: ஜெயக்குமார்தான இந்த பிரச்னைக்கு காரணமா?
கேள்வி: ஜெயக்குமார் கழகத்தின் செய்திகளை, பத்திரிகையாளர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்பவர், அதே பணியை தான் அன்றும் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
கேள்வி: மோடி சொல்லித்தான் கட்சியில் இணைந்தேன் என்று ஓபிஎஸ் சொல்கிறாரே?.
பதில்: அது, அவருடைய கருத்து
கேள்வி: பாஜக மத்தியஸ்தம் செய்கிறதா?
பதில்: அவசியம் இல்லை.
கேள்வி: இபிஎஸ்-ஐ முன்னிலைப்படுத்துவதன் அவசியம் என்ன? என்ன மாதிரியான ஆளுமைகள் உள்ளன?
கேள்வி கேட்டிருக்க கூடாது என நினைக்கிறேன். நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக ஆட்சி செய்தவரை பற்றி இந்த கேள்வி கேட்டிருக்க கூடாது.
கேள்வி: ஜானகி போன்று ஓபிஎஸ் விட்டு கொடுக்க வேண்டும் என பேசப்படுகிறதே?
பதில்: ஜானகி நிலை வேறு, ஓபிஎஸ் நிலை வேறு.
கேள்வி: பொது குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் செல்லப்போவதாக சொல்லப்படுகிறதே?
பதில்: யார் நீதிமன்றம் சென்றாலும் எடப்பாடி பழனிசாமி வென்று காட்டுவார். அவர் பக்கமே வெற்றி உள்ளது. வழக்கு போட்டவர்களுக்கு தோல்வியே பரிசளிக்கப்பட்டிருக்கிறது, அதுவே தொடரும்.
கேள்வி: பொதுக்குழு நடக்குமா:
பதில்: கண்டிப்பாக நடக்கும்.