தேர்தல் பணியை முன்னிட்டு ஒடிசாவில் இருந்து தமிழகம் வந்தது துணை ராணுவம்..

சட்டசபை தேர்தல் பணிக்காக 7 துணை ராணுவ கம்பெனி படையினர் ஒடிசாவில் இருந்து இன்று தமிழகம் வந்தடைந்தனர்.

FOLLOW US: 

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் 10,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது தமிழக காவல்துறையினருடன் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில், ஒடிசாவில் இருந்து இன்று காலை ரயில் மூலமாக ஆயுதம் ஏந்திய 7 கம்பெனி துணை ராணுவப்படையினர் இன்று சென்னை வந்தடைந்தனர்.தேர்தல் பணியை முன்னிட்டு ஒடிசாவில் இருந்து தமிழகம் வந்தது துணை ராணுவம்..

அவர்கள் அனைவரும் பேருந்து மூலமாக திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக அவர்கள் சென்னையில் இருந்து பேருந்து மூலமாக அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் 65 துணை ராணுவ கம்பெனி படையினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 235 துணை ராணுவ கம்பெனி படையினர் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர்.  

Tags: Tamilnadu train assembly election company military odisa 7 battalion

தொடர்புடைய செய்திகள்

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக தீர்மானம்..!

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக  தீர்மானம்..!

டாப் நியூஸ்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!