மேலும் அறிய
Advertisement
மதுரை வடக்கு தொகுதியில் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறார் - சுவரொட்டிகளால் தவெகவினர் உற்சாகம்
மதுரை வடக்கு தொகுதியில் திமுக எம்.எல்.ஏ., தளபதியை எதிர்த்து இளையதளபதி போட்டியிடவுள்ளார். என தவெகவினர் சிலாகித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் தென் இந்திய திரையுலகை தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தெரிந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ் திரையுலகின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் சூழலில் தான், அதனை விட்டு முழுவதுமாக விலகி தனது அரசியல் பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
அரசியலுக்கு வந்த விஜய்
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்குவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு எனவும் விஜய் அறிவித்தார். அடுத்தடுத்து கட்சிக் கொடி, கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார். இந்நிலையில் தான், வரும் 27ம் தேதி தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழக மாநாடு மேலும் நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார். இந்நிலையில் மதுரை வடக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிடுகிறார், என தவெக நிர்வாகிகள் ஒட்டிய சுவரொட்டிகளால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய்
தாவெக தலைவர் நடிகர் விஜய் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி, தூத்துக்குடி தொகுதி, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவார் என தகவல் வெளியானது. இதனிடையே அரசியல் கட்சி பயிலரங்கம் நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டிற்கான பணிகளும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கூறி மதுரை வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பில் 2026ன் மதுரை வடக்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர் கழக தலைவர் விஜய் என்ற வாசகங்களுடன் மதுரை வடக்கு சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட பகுதிக்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளை பார்க்கக்கூடிய தமிழக வெற்றி கழகத்தினரும் உற்சாகமடைந்துள்ளனர். மதுரை வடக்கு தொகுதியில் திமுக எம்.எல்.ஏ., தளபதியை எதிர்த்து இளையதளபதி போட்டியிடவுள்ளார். என தவெகவினர் சிலாகித்து வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karthik Subbaraj : ஏன் என்கிட்ட இந்த கதைய சொல்ல...ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்த்து ரஜினி கொடுத்த ரியாக்ஷன்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Nithya Menen : ஒரு நாள் ஷூட் இல்லனா தனுஷ் நிலைமை அவளோதான்...இட்லி கடை பட அனுபவங்களை பகிர்ந்த நிதயா மேனன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion