மேலும் அறிய
பத்திரப்பதிவு ஊழலில் 10% கமிஷன்: அமைச்சர் கொள்ளை, கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி !
மதுரை மாநகராட்சியில் புதிய திட்டம் ஏதாவது உண்டா என்பதை இந்த தொகுதி அமைச்சர்தான் தெரிவிக்க வேண்டும் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு.

ஈபிஎஸ்
Source : whats app
10 பர்சன்ட் அமைச்சர் மூர்த்தியின் கொள்ளையோ கொள்ளை… - பத்திரப்பதிவு ஊழல் குறித்து இபிஎஸ் குற்றச்சாட்டு.
திமுக ஆட்சி அவல ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம் - ஈ.பி.எஸ்.,
மதுரையில் மக்களைக் காப்போம் பயணத்தில் மேலூர் தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒத்தக்கடையில் பேசினார்..,” இந்த தொகுதி மந்திரி எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்குத் தெரியும். மேலூரில் பேசும்போதே கீழிருந்து மந்திரியைப் பற்றி பேசுங்கள் என்று மக்கள் சொல்கிறார்கள். பத்திரப்பதிவுத் துறையில் கொள்ளையோ கொள்ளை அடிக்கிறார் என்று மக்கள் எனக்கு பாயின்ட் எடுத்துக்கொடுக்கிறார்கள். ஏற்கெனவே பிராந்தி கடை மூலம் 10 ரூபாய் அமைச்சர் என்று ஒருவர் பெயர் வாங்கியிருக்கிறார், யாரென்று உங்களுக்குத் தெரியும். இந்த அமைச்சர் 10 பர்சென்ட் அமைச்சர், பத்திரப்பதிவு செய்தால் 10% அவருக்குப்போய் சேரவேண்டும். அப்படி சேர்ந்தால்தான் பத்திரப்பதிவு நடக்கும், இது உண்மைதானே…? ஏற்கெனவே கஷ்டத்தில்தான் வீடு, நிலத்தை விற்கிறார்கள், அப்படியிருக்கும்போது 10% கொடுத்தால் மக்கள் எப்படி வாழ முடியும்? திமுக ஆட்சி அவல ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்.
அமைச்சர் தொந்தரவு கொடுக்கிறார்
தமிழகத்தில் 582 பத்திரப்பதிவு அலுவலகம் இருக்கிறது. அதில் ஒரு வருஷத்துக்கு மேல் பத்திரப்பதிவு அலுவலர் இருந்ததே கிடையாது, ஒரு வருஷம் ஒருவர் இன்னொரு வருஷம் இன்னொருவர். இப்படி 582 பேருக்கும் டிரான்ஸ்ஃபர் போட்டு பெரிய தொகை வாங்குகிறார்கள். அதிமுக ஆட்சி வரும், கீழே இருக்கும் சக்கரம் மேலே வரும், அப்போது இப்படிப்பட்ட ஊழல் எல்லாம் தோண்டி எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
போனமுறை போல நினைத்துவிடாதீர்கள், போனமுறை நான் 4 ஆண்டுகள் 2 மாதம் முதல்வராக இருந்தேன். அப்போது எங்களுக்கு இதுபோல செய்ய மனமில்லாமல் இருந்தது. ஆனால் இந்த அரசு மிக மிகக் கேவலமாக எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்களிடம் பணம் பறிக்கப்படுகிறது. அதிமுக அரசு அமைந்ததும் இதற்கெல்லாம் இன்றைய அமைச்சர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அதிமுக எழுச்சிப் பயணம் நடத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இங்கிருக்கும் அமைச்சர் தொந்தரவு கொடுக்கிறார். எந்த விதத்தில் நியாயம்? நானும் முதல்வராக இருந்தேன் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. நான் முதல்வராக இருந்தபோதுதான் அதிக போராட்டம் நடத்தினார்கள். தடையே கிடையாது, இதுதான் ஜனநாயகம். எதிர்ப்புகளை சந்திக்க தில்லு திராணி தெம்பு வேண்டும். அதெல்லாம் இந்த முதல்வருக்கு இல்லை.
பர்மிஷன் கொடுப்பதில்லை
பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என்றாலே பர்மிஷன் கொடுப்பதில்லை, எழுச்சிப் பயணத்தில் விளம்பரத் தட்டிகளையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். இப்படிப்பட்ட அவல ஆட்சி தொடர வேண்டுமா?
நான் 10 முறை தேர்தலில் நின்றிருக்கிறேன், அதிமுகவில் அதிக முறை தேர்தலில் நின்று சட்டமன்றம் நாடாளுமன்றம் இரண்டிலும் போட்டியிட்டுள்ளேன். எங்களிடம் உங்கள் பாட்சா பலிக்காது. அடுத்தாண்டு அதிமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதுமட்டுமில்லை, திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. மதுரை மாநகராட்சியில் புதிய திட்டம் ஏதாவது உண்டா என்பதை இந்த தொகுதி அமைச்சர்தான் தெரிவிக்க வேண்டும்” எனவும் பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















