KT Raghavan resigns: பாலியல் வீடியோ சர்சையில் பாஜக கே.டி.ராகவன்: மறுப்பு தெரிவித்து பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா!
‛இந்த வீடியோவை டில்லி தலைமைக்கு கொண்டு செல்ல 6 மாதங்கள் ஆகலாம்... அதுவரை காத்திருக்க முடியுமா.’ என அண்ணாமலை கேட்டதாக’ அந்த யூடியூப்பர் கூறுகிறார்.
பாலியல் குற்றச்சாட்டுகள் இந்தியாவிற்கு புதிதல்ல. அதிலும் பொதுவாழ்க்கையில் வந்ததாக கூறி, பாலியல் சர்சையில் சிக்கும் அரசியல் பிரமுகர்களின் பாலியல் குற்றச்சாட்டுகள் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வரிசையில், தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தற்போது பாலியல் தொடர்பான சர்சையில் சிக்கியுள்ளார். அதுவும் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்தவர்களால் அந்த குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த யூடியூப்பர் ஒருவரால் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோ பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ காலில் பெண் ஒருவருடன் அரை நிர்வாணத்துடன் கலந்துரையாடும் கே.டி.ராகவன், எதிர் திசையில் பேசும் பெண்ணிடம் சில ஆபாச சமிக்ஞை காட்டுகிறார். இறுதியில் அவரே முழு நிர்வாணமாகி, கொச்சையான செயலில் ஈடுபடுவது போன்ற காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் அந்த வீடியோவின் பின்னணியில், வேறு சில விபரங்களையும் தெரிவித்திருந்தார் அந்த யூடியூப்பர். அதில், சம்மந்தப்பட்ட அந்த வீடியோவை அவர் உடனே வெளியிடவில்லை என்றும், அது தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசித்ததாகவும். ‛இந்த வீடியோவை டில்லி தலைமைக்கு கொண்டு செல்ல 6 மாதங்கள் ஆகலாம்... அதுவரை காத்திருக்க முடியுமா.’ என அண்ணாமலை கேட்டதாகவும், பின்னர் ஒரு கட்டத்தில் தான் கூறிய தகவலின் மீதிருந்த நியாயத்தின் அடிப்படையில், அவரே வீடியோவை வெளியிட்டுக் கொள்ள அனுமதித்ததாக கூறுகிறார் அந்த யூடியூப்பர்.
சிவசங்கர் பாபா சொத்துக்களை அபகரிக்க கே.டி.ராகவன் முயற்சிக்கிறார் என சினிமா நடிகர் சண்முகராஜா குற்றம்சாட்டிய நிலையில், அது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‛அந்த விவகாரம் சட்டப்படி கே.டி.ராகவன் சந்திப்பார்,’ என பதிலளித்திருந்தார். இந்நிலையில் தற்போது, கே.டி.ராகவன் மீது இந்த பாலியல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வேறு யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும், பொதுவெளியில் பிரபலமான ஒருவர் மீது எழுந்துள்ள இந்த பாலியல் புகாரும், அதற்கு ஆதரமாக வெளியாகியுள்ள இந்த வீடியோவும் தற்போது கே.டி.ராகவனுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து கேட்பதற்காக கே.டி.ராகவனை பல முறை தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதே போல், அனுமதி பெற்ற வீடியோ வெளியிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரும் இதில் அடிபட்டுள்ளதால், அவரிடம் அது குறித்து கருத்து கேட்க தொடர்பு கொண்டோம், அவருக்கும் அழைப்பை ஏற்கவில்லை. தமிழ்நாடு பாஜகவில் எழுந்துள்ள இந்த பூதாகர சர்சை, தற்போது அக்கட்சி கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜினாமா செய்தார் கே.டி.ராகவன்
இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்து கே.டி.ராகவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . தனது முகநூல் பக்கத்தில் அது தொடர்பான அறிவிப்பை அவர் தெரிவித்துள்ளார்.
இதோ அவரது அறிவிப்பு..
தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்...எனனை சார்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்...நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன் ...என்னையும் என்கட்சியையும் களங்கபடுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது ...
இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன்... நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்..குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்...சட்ட படி சந்திப்பேன் ..தர்மம் வெல்லும் ....
இது