அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

சிவகாசியில் உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் சீனிவாசன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவிற்கு இன்னும் 3 நாட்களே உள்ள, தேர்தல் பறக்கும் படைகள் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, அண்ணாநகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மோகன், அரவக்குறிச்சியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

இந்த நிலையில், சிவகாசியில் உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பரான சீனிவாசன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையை முன்னிட்டு, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது ரூ.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags: dmk 2021 admk Stalin Election it raid rajendra balaji mc sampath

தொடர்புடைய செய்திகள்

நூலகங்களில் திமுக ஆதரவு நாளேடுகளை வாங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலங்களுக்கு சுற்றறிக்கை

நூலகங்களில் திமுக ஆதரவு நாளேடுகளை வாங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலங்களுக்கு சுற்றறிக்கை

Narthagi Nataraj | யார் இந்த நர்த்தகி நடராஜ் : முதல்வர் ஸ்டாலின் இவரைத் தேர்வுசெய்த காரணம் என்ன?

Narthagi Nataraj | யார் இந்த நர்த்தகி நடராஜ் : முதல்வர் ஸ்டாலின் இவரைத் தேர்வுசெய்த காரணம் என்ன?

தோல்வி ஒருபுறம்... விலகல் மறுபுறம்... ஆனாலும் மக்கள் பணியாற்றும் மநீம!

தோல்வி ஒருபுறம்... விலகல் மறுபுறம்... ஆனாலும் மக்கள் பணியாற்றும் மநீம!

திமுகவில் இணைகிறாரா மகேந்திரன்? பரவிய செய்திக்கு பதிலளித்த மகேந்திரன்!

திமுகவில் இணைகிறாரா மகேந்திரன்? பரவிய செய்திக்கு பதிலளித்த மகேந்திரன்!

Neutrino Project | சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டம் கூடாது - வைகோ அறிக்கை

Neutrino Project | சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டம் கூடாது - வைகோ அறிக்கை

டாப் நியூஸ்

Tamil Nadu Corona LIVE: கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Corona LIVE: கர்நாடகாவில் 9 ஆயிரத்து 808 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

கோவேக்சினை விட கோவிஷீல்டு ‛செம்ம’ : ஆய்வில் தகவல்!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

TN School Education : 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!