அமைச்சர் எம்.சி.சம்பத் அலுவலகத்தில் வருமானவரி சோதனை.. 9 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை நடவடிக்கை..

தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் உறவினர் வீடு மற்றும் அலுவலங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US: 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், கடலூர் தொகுதியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், வருமான வரித்துறையினர் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் வீட்டில் நேற்று மாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் முக்கிய பதவியை வகித்துவருபவரும், தனியார் பள்ளிகள் கூட்டமைப்ப மாநில செயலாளருமான இளங்கோவனுக்கு சொந்தமாக தருமபுரி மற்றும் ஓசூரில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. சென்னையிலும் அவருக்கு அலுவலகங்கள் உள்ளன.அமைச்சர் எம்.சி.சம்பத் அலுவலகத்தில் வருமானவரி சோதனை.. 9 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை நடவடிக்கை..

இளங்கோவனின் வீடு, அவருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் ரூபாய் 6 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சூழலில், இன்று காலை வருமான வரித்துறையினர் கணக்கில் காட்டப்படாத மேலும் ரூ.3 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அமைச்சர் எம்.சி. சம்பத்தின் உறவினர் வீட்டில் 9 கோடி கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Tags: dmk 2021 admk it raid assemble election Cuddalore minister m.c.sampath 9 cr

தொடர்புடைய செய்திகள்

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக தீர்மானம்..!

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக  தீர்மானம்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!