வீடியோ கேம் தான் விளையாடுகிறார் இன்பநிதி: உதயநிதி ஸ்டாலின் கலகல
உதயநிதி வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் அவரது அரசியல் பற்றி நான் எப்படி ஆருடம் கூற முடியும் என்றும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கூறியுள்ளார்.

ABP நாடு டிஜிட்டல் தளத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திமுக வேட்பாளருமான உதயநிதி பிரத்யேக பேட்டியளித்தார். அதில், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு அடுத்து இன்பநிதியா... என்று அவரது மகன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி, ‛அவர் இப்போது தான் படித்துக் கொண்டிருக்கிறார் என்றும், 14 வயது சிறுவனுக்கு என்ன அரசியல் அறிவு இருக்குமோ அது மட்டுமே அவரிடம் இருப்பதாக கூறிய உதயநிதி, வீடியோ கேம் மற்றும் புட்பால் விளையாட்டில் அவர் ஆர்வமாக இருப்பதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, 30 ஆண்டுகளுக்கு பின்னால் நடப்பதை முன்கூட்டியே என்னால் ஆரூடம் கூற முடியாது என்று கூறினார்.





















