மேலும் அறிய
Advertisement
அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர், "Just like" அவ்வளவு தான் - செல்லூர் ராஜூ டேக் இட் ஈசி..!
தி.மு.க ஆட்சியில் மதுரையில் வெயில் கூட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 108 டிகிரி அடித்துள்ளது.
மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க., மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக தமிழக முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்., மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே ரிக்ஷா பேரணியை துவக்கி வைத்து, ரிக்ஷா ஓட்டினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்...,” ஜான்சிராணி பூங்கா அருகே இந்த நிகழ்ச்சி நடத்த காரணம், இங்கு தான் எம்.ஜி.ஆர்., மன்றம் உருவாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., மாநாடும் இங்கு தான் நடத்தியுள்ளார். அதனால் இங்கு சிறப்பாக இருக்கும் என நிகழ்ச்சி நடத்தினோம். வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் மாநாடு இதுக்கு முன்பு நடத்திய மாநாடை விடவும், இதற்கு பின்பும் யாரும் நடத்த முடியாத அளவிற்கும் மாநாடு அமையும். ஒரு எம்.ஜி.ஆரின் படத்தை விஞ்ச வேண்டும் என்றால் மற்றொரு எம்.ஜி.ஆர் படம் தான் வெற்றியை முறியடிக்கும். அது போல் அதிமுக மாநாட்டை அதிமுக தான் முறியடிக்கும்.
ஓ.பி.எஸ்., குறித்து நான் விமர்சித்த அந்த வார்த்தைகள் நான் சொன்னது அல்ல, இதற்கு முன்னால் பலரும் கட்சியை விட்டு வெளியேறிய போது ஜெயலலிதா குறிப்பிட்டது. அதிமுகவின் கோவிலுக்குள் இருக்கும் வரை அவர்கள் கல்லாக இருந்தாலும் மதிப்போம். கோவிலுக்குள் இருந்து வெளியே வந்துவிட்டால் அவர்களை மிதித்து விட்டு சென்று விடுவோம். கொடநாடு வழக்கை தீவிரமாக விசாரித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த வழக்கில் ஈடுபட்டது திமுகவினர் தான் என்பது அப்போதே தெரியவந்தது. துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போதே கொடநாடு வழக்கு விசாரணை குறித்து அவருக்கு நன்றாக தெரிந்திருந்தும், இப்போது போராட்டம் நடத்துகிறார் என்றால் அவரது நோக்கம் என்ன?
அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர், "Just like" அவ்வளவு தான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணி கட்சியினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார் மோடி. மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமியின் அருமை அண்ணாமலைக்கு ஏன் தெரியவில்லை? காவல்துறையினர் ஸ்பாட் பைன் என்ற பெயரில் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கி வருகின்றனர். திமுக ஆட்சியில் விலை வாசி உள்ளிட்ட எல்லாமே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் மதுரையில் வெயில் கூட வரலாற்றில் இல்லாத அளவுக்கு 108 டிகிரி அடித்துள்ளது" என்றார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - IPL 2024: அடுத்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் இல்லையா? உலகக் கோப்பையே முக்கியம்.. ட்விஸ்ட் வைக்கும் பிசிசிஐ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion