மேலும் அறிய
Advertisement
Madurai: மின் கம்பம் விழுந்த விபத்தில் சேதமடைந்த கால்; அரசு பணி கோரி விளையாட்டு வீரரின் தாயார் ஆட்சியரிடம் மனு
தனது மகனுக்கு அரசு பணி வழங்க கோரி மின் கம்பம் விழுந்த விபத்தில் கால் சேதமடைந்த விளையாட்டு வீரர் பரிதி விக்னேஸ்வரனின் தாயார் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.
மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணான தீர்த்தம் என்பவரின் மகன் பரிதி விக்னேஸ்வரன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஜூடோ விளையாட்டு வீரரான பரிதி விக்னேஸ்வரன் பல்வேறு போட்டிகளிலும் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
இதனிடையே கடந்த வாரம் கோச்சடை பகுதியில் பரிதி விக்னேஸ்வரன் தனது நண்பர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது கோச்சடை முத்தையா கோவில் அருகே கிரேன் மூலம் புதிய மின்கம்பத்தை நடும் பணியின்போது கிரேனில் இருந்த மின்கம்பம் அறுந்து சாலையில் சென்று கொண்டிருந்த விளையாட்டு வீரர் பரிதி விக்னேஷ்வரன் இடது காலில் விழுந்ததில் கணுக்கால் முறிந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கணுக்கால் காயம் தீவிரமாக இருப்பதால் காலை அகற்றும் சிகிச்சை நடைபெற்றுவருகிறது. இதனிடையே அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து மின்வாரிய சார்பில் மூன்று லட்சமும் திமுக சார்பில் இரண்டு லட்சம் என ஐந்து லட்ச ரூபாய் நிவாரணத் தொகை அளித்தார்.
ஓரிரு வாரங்களில் நடைபெறும் ஜூடோ போட்டிக்கான மாநில போட்டியில் கலந்துகொள்ள தயாராக இருந்த மாணவன் பரிதி விக்னேஸ்வரன் மின் வாரிய துறையின் அலட்சியத்தால் கால் அகற்றும் நிலை உருவாகியுள்ளதால் தனது மகனின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாய் உள்ளதால், தனது மகனின் ஆசையான அரசு பணியை வழங்க வேண்டும் என கோரி விளையாட்டு வீரரின் தாயார் தீர்த்தம் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தார்.
மனுவில், எனது மகன் போட்டியில் கலந்து கொண்டிருந்தால் நிச்சயமாக முதலிடம் பெற்று அரசு வேலை கிடைத்திருக்கும், எனது மகனுடைய ஆசையான அரசு வேலை வழங்க வேண்டும் எப்படி இருந்திருந்தாலும் எனது மகன் நிச்சயம் தனது திறமையால் அரசு வேலையை பெற்றிருப்பான் இந்த விபத்தால் மட்டுமே தற்பொழுது போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே அரசு நிச்சயம் எனது மகனுக்கு அரசு பணி வழங்க வேண்டும் , கால்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து முன்பு இருந்தது போன்று உடல் நிலையை பெறுவதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தந்தூரி சிக்கன் சாப்பிட்ட குழந்தை உட்பட 3 பேருக்கு உடல்நலம் பாதிப்பு - மதுரையின் பிரபல உணவகத்திற்கு நோட்டீஸ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஃபேக்ட் செக்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion