திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது : அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலை
திமுகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டதாலேயே எனது வேட்பு மனு தொடர்பாக பிரச்னை செய்தனர் என பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

திமுகவிற்கு தோல்வி பயம் வந்தததால்தான் தனது வேட்பு மனு குறித்து பிரச்னை செய்ததாக பாஜக சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் வேட்பு மனு நிறுத்திவைக்கப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், அதற்கு காரணம் திமுகவினர் செய்த பிரச்னைதான் என்றும், எந்த விளக்கமும் கூடுதலாக கொடுக்காமலேயே தனது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அண்ணாமலை வேட்பு மனுவில் எந்த குளறுபடியும் இல்லை என்றும், எல்லா தகவல்களும் முழுமையாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு, திமுகவினருக்கு ஏற்பட்டுள்ள தோல்வி பயமே தனது வேட்பு மனுவை ஏற்க கூடாது என பிரச்னை செய்ய காரணம் என்றும் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

