அதிமுக கூட்டணிக்கு எதிரான ஆழிப்பேரலை- கி.வீரமணி டுவிட்டர்
வருமான வரித்துறை சோதனை போன்ற அச்சுறுத்தல்களால் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரான ஆழிப்பேரலையை அச்சுறுத்தல்களால் தடுக்க முடியாது என்று கி.வீரமணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 6-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று காலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, தி.மு.க. அண்ணாநகர் வேட்பாளர் மோகன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறையினர் நடத்தி வரும் இந்த சோதனைக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சோதனைக்கு தி.க. தலைவர் கி.வீரமணி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ வருமான வரித்துறையை ஏவி விடுவது வன்மையான கண்டனத்திற்குரியது! தி.மு.க.விற்கு இத்தேர்தலில் வெற்றி உறுதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைவது உறுதியிலும் உறுதியாகும் நிலை!

வருமான வரித்துறையை ஏவிவிடுவது -
வன்மையான கண்டனத்திற்குரியது!

தி.மு.க.விற்கு இத்தேர்தலில் வெற்றி உறுதி - அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைவது உறுதியிலும் உறுதியாகும் நிலை!
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) April 2, 2021

பா.ஜ.க-அ.தி.மு.க.வின் ஒரே ஆயுதமான வருமான வரித் துறை சோதனை என்ற அச்சுறுத்தலை - மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன் இல்லம் மற்றும் சில தி.மு.க. வேட்பாளர்களைக் குறி வைத்து இன்று வருமான வரித்துறையினரை ஏவிவிட்டுள்ளனர். இதன் உண்மை நிலையை வாக்காளர்களாகிய பொதுமக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள். இந்த அரசியல் பழிவாங்கும் அச்சுறுத்தல்களால் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வீசும் ஆழிப்பேரலையை ஒருபோதும் தடுத்துவிட முடியாது!

பா.ஜ.க-அ.தி.மு.க.வின் ஒரே ஆயுதமான வருமான வரித் துறை சோதனை என்ற அச்சுறுத்தலை - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மகள் திருமதி செந்தாமரை சபரீசன் இல்லம் மற்றும் சில தி.மு.க. வேட்பாளர்களைக் குறி வைத்து இன்று (2.4.2021) வருமான வரித்துறையினரை ஏவிவிட்டுள்ளனர்.
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) April 2, 2021

இதன் உண்மை நிலையை வாக்காளப் பெருமக்களாகிய பொதுமக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள். இந்த அரசியல் பழிவாங்கும் அச்சுறுத்தல்களால் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வீசும் ஆழிப்பேரலையை ஒருபோதும் தடுத்துவிட முடியாது!
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) April 2, 2021

முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட அ.தி.மு.க. அமைச்சரின் டைரி, அதில் இருந்த குறிப்புகள்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பொழுதும் ஆங்காங்கே அ.தி.மு.க.வினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம்குறித்து செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.

முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட அ.தி.மு.க. அமைச்சரின் டைரி, அதில் இருந்த குறிப்புகள்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பொழுதும் ஆங்காங்கே அ.தி.மு.க.வினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம்குறித்து செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) April 2, 2021

வருமான வரித் துறையை ஏவிவிடும் நடவடிக்கைகள் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு உரம் போடுவதாகுமே தவிர, அவர்களது வெற்றியை ஒருபோதும் தடுக்காது.
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் தோல்வி பயத்தின் உச்சம்தான் இது!
இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) April 2, 2021

வருமான வரித் துறையை ஏவிவிடும் நடவடிக்கைகள் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு உரம் போடுவதாகுமே தவிர, அவர்களது வெற்றியை ஒருபோதும் தடுக்காது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் தோல்வி பயத்தின் உச்சம்தான் இது! இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.