Tamilisai Soundararajan : ரங்கசாமிக்கு விஷத்தை வைத்து தமிழிசை ஆட்சி நடத்தி வருகிறார்.. நாராயணசாமி காட்டம்...
எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உண்டியல் குலுக்கி பணம் வசூல் செய்து தனி விமானம் ஏற்படுத்தி தருகிறோம், அதில் தயவு செய்து தெலுங்கானா சென்று விடுங்கள் -முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டம்.
எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உண்டியல் குலுக்கி பணம் வசூல் செய்து தனி விமானம் ஏற்படுத்தி தருகிறோம், அதில் தயவு செய்து தெலுங்கானா சென்று விடுங்கள் என்று தமிழசையை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் தனியார் உணவகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி...
ஏழை எளிய மக்களிடம் மருத்துவத்திற்காக கட்டணம் வசூலிக்கும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கடந்த 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். இதேபோன்று காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் , திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.
இந்தியாவில் உள்ள பல்நோக்கு பெரிய மருத்துவமனைகளில் மூன்றாவது இடத்தில் ஜிப்மர் உள்ளது.ஆனால் ஜிப்மர் மருத்துவமனையில் இதய நோயாளிகளை பல மாதங்கள் கழித்து வர திருப்பி அனுப்புகிறார்கள் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உடனடி தீர்வு இல்லை நோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகள் வழங்கப் படுவதில்லை தேவையான மருத்துவர்கள் பணிகள் இல்லை ஆள் பற்றாக்குறை உள்ளது என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.
மக்களுக்கான போராட்டத்தில் திருமாவளவன், ரவிக்குமார் கலந்து கொண்டு பேசினார்கள். ஆனால் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஜிப்ரில் அனைத்து மருத்துவ வசதிகள் உள்ளது அனைத்து மருந்துகளும் கை இருப்பில் உள்ளது என பொய்யான தகவலை தெரிவித்துள்ளதுடன். ஏழை நோயாளிகளிடம் கட்டண வசூலிக்கப்படவில்லை சிறப்பான மருத்துவ சிகிச்சை ஜிப்மரில் அளிக்கப்படுகிறது அப்படி இருக்கும்போது புதுச்சேரியில் விழுப்புரம் எம் .பி க்கு என்ன வேலை என்று ஆவேசமாக பேசியது துணைநிலை ஆளுநர் தரம்தாழ்ந்து பேசி உள்ளார் என்று குற்றம் சாட்டினார்.
ஜிப்மர் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கின்ற பொறுப்பு எம்பிக்கு உண்டு ஆனால் ஆளுநர் தரம் தாழ்ந்து பேசி இருப்பது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறிய நாராயணசாமி இதன் மூலம் துணைநிலை ஆளுநராக தமிழிசை இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என்பதை காட்டுகிறது என்றார். ஜிப்மர் பற்றி பேசினால் ஜிப்மர் இயக்குனர் தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர துணைநிலை ஆளுநர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற நாராயணசாமி ஆளுநராக உள்ள தெலுங்கானாவில் தமிழிசையை யாரும் மதிப்பதில்லை, தெலுங்கானாவில் முதல்வர் மதிப்பதில்லை, அமைச்சர்கள் அதிகாரிகள் மதிப்பதில்லை ஆனால் டம்மி முதல்வராக ரங்கசாமி உள்ள புதுச்சேரியில் தமிழிசை சூப்பர் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
ஜிப்மர் நிர்வாகத்தில் சீர்கேடு உள்ளது மருந்து மாத்திரைகள் கையிருப்பு இல்லை இதை நிவர்த்தி செய்ய வேண்டியதில் ஆளுநருக்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பிய நாராயணசாமி தமிழிசை தரம் தாழ்ந்து பேசுவது இல்லாமல் தமிழக அரசியலில் மூக்கு நுழைத்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார். ஆளுநர்களுக்கு கருத்துக்களை சொல்ல அதிகாரம் உண்டு ஆனால் அது அரசுக்கு எதிராக இருக்கக் கூடாது என்ற அவர் இதேபோன்று தான் ஆளுநர் ரவியும் செயல்பட்டு வருகிறார் என்றார். நரேந்திர மோடியின் ஊதுகுழலாக ஆளுநர்கள் செயல்படுகிறார்கள் என்றும் தமிழிசை ஆளுநர் அவர் வேலையை பார்க்க வேண்டுமே தவிர ஜிப்மர் நிர்வாகத்தை பற்றி அவர் பேசத் தேவையில்லை. ஜிப்மாருக்கு தேவையான நிதிகளை பெற எம்பிகளுக்கு அதிகாரம் உண்டே தவிர ஆளுநருக்கு இல்லை எனவே தரம்தாழ்ந்து பேசக்கூடாது.
அரசையும் ஆட்சியாளர்களையும் விமர்சனம் செய்வதுதான் ஆளுநர்களின் வேலையா என்று குறிப்பிட்ட நாராயணசாமி மோடியும் அமித்ஷாவும் ஆளுநர்களை தூண்டிவிட்டு ஆளும் அரசுக்கு தொல்லை கொடுக்க உத்தரவிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். கிரண்பேடி இடம் சண்டை போட்டு நாங்கள் ஆட்சி நடத்தினோம் ஆனால் ரங்கசாமிக்கு விஷத்தை வைத்து தமிழிசை ஆட்சி நடத்தி வருகிறார் புதுச்சேரி மாநிலத்தில் நிதி பற்றாக்குறை உள்ளது, என்று இந்த மாநிலம் திவால் ஆகுமோ என்ற நிலை உள்ளதாக கூறிய அவர்
எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உண்டியல் குலுக்கி பணம் வசூல் தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் தயவுசெய்து தெலுங்கானாவிற்கு சென்று விடுங்கள் இன்று கடுமையாக விமர்சித்தார். அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் கால தாமதப்படுத்துவதால் ஆளுநர்களுக்கு நீதிமன்றமே தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக பேசிய நாராயணசாமி ஜிப்மரில் இலவச சிகிச்சைக்கு பதில் பணம் என்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கை மேலும் தேவையான மருத்துவர்கள், மருந்துகள் இருக்க வேண்டும் நோயாளிகள் அலைகழிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்களது முக்கியமான கோரிக்கை அப்படி இல்லை என்றால் எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.