மேலும் அறிய
திமுகவை வீழ்த்த முதல்வர் பழனிசாமி தன்னுயிரை கொடுக்கவேண்டாம் - மு.க ஸ்டாலின்
“திமுகவை வீழ்த்த உங்கள் உயிரை தரவேண்டாம், நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து திமுக ஆட்சியை பார்க்க இருக்கவேண்டும்” என முதல்வர் பழனிசாமி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மு.க ஸ்டாலின்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுகவை வீழ்த்த என் உயிரையும் கொடுப்பேன் என முதல்வர் பழனிசாமி பேசிவருகிறார். அவர் அப்படி எல்லாம் செய்யவேண்டாம். திமுக ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதை, நீண்ட காலம் உயிரோடு இருந்து அவர் பார்க்கவேண்டும்” என்று பேசினார்.
மேலும், பாஜக என்ன குட்டிக்கரணம் போட்டாலும் இங்கு வெற்றி பெறப்போவதில்லை என்றும், அவர்கள் ‘வாஷ் அவுட்’ என்பது நாடாளுமன்ற தேர்தலின்போதே தெரிந்துவிட்டது எனவும் விமர்சித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















