மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக்கூடாது - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
"இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகள் அயல்பணி மாற்றம்: மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கக்கூடாது" : அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மாநில அரசுகளில் பணியாற்றும் இ.ஆ.ப, இ.கா.ப. அதிகாரிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி இல்லாமலேயே மத்திய அரசுப் பணிக்கு அயல்பணி (Deputation) முறையில் அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்கிக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது!
மாநில அரசுகளில் பணியாற்றும் இ.ஆ.ப, இ.கா.ப. அதிகாரிகளை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி இல்லாமலேயே மத்திய அரசுப் பணிக்கு அயல்பணி (Deputation) முறையில் அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்கிக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது!(1/4)#AllIndiaService #FederalFeature
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 20, 2022
இதற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் விதிகளின் 6-ஆவது விதியை திருத்துவது தொடர்பாக மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்துக் கேட்டுள்ளது. மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மத்திய அரசு இந்தத் திருத்தத்தை செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன!
இதற்காக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் விதிகளின் 6-ஆவது விதியை திருத்துவது தொடர்பாக மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்துக் கேட்டுள்ளது. மாநில அரசுகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் மத்திய அரசு இந்தத் திருத்தத்தை செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன!(2/4)#Federalism
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 20, 2022
மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்படும் குடிமைப்பணி அதிகாரிகளை மத்திய அரசு தன்னிச்சையாக அழைத்துக் கொள்வதென்பது மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயலாகும். அதுமட்டுமின்றி, மத்திய அரசுக்கு அஞ்சி பணியாற்றும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்படுவர். இது நல்ல நிர்வாகத்தை வழங்காது!

(3/4)
குடிமைப்பணி அதிகாரிகளை தன்னிச்சையாக மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மாநில உரிமையை பறிக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்!
குடிமைப்பணி அதிகாரிகளை தன்னிச்சையாக மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மாநில உரிமையை பறிக்கும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்!(4/4)#ProtectFederalism
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) January 20, 2022
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - pongal 2022 | நகரத்தார்கள் நடத்திய செவ்வாய் பொங்கல் விழா - 60 கிடாய்களை ஒரே இரவில் வெட்டி கோலாகலம்