கர்நாடக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலினுக்கு தைரியம் இருக்கிறதா? - சிவி சண்முகம்
உச்ச நீதிமன்றத்தில் ஏன் காவிரி நீர் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை திமுக அரசு தொடரவில்லை - சிவி சண்முகம் கேள்வி
விழுப்புரம்: காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் துரோகம் செய்து வருகிறார் என்றும் தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் தீர்மாணம் நிறைவேற்றுவாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம்:
இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய தவறை மறைப்பதற்காக காலம் கடந்து இந்த சட்டமன்ற கூட்டத்தை கூட்டியுள்ளார். இன்றைக்கு டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹெக்டர் ஒன்றுக்கு 13.500 ரூபாய் வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 20000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு வெறும் 13 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய பேரிடர் மேலான்மை வாரியம் பரிந்துரைத்திருப்பது ஹெக்டேர் ஒன்றுக்கு 17,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது ஆனால் அதனையும் கொடுக்காமல் தமிழ்நாடு முதல்வர் 13.500 கொடுக்க என்ன காரணம். ஏன் பேரிடர் மேலாண்மை வாரியம் கொடுக்க சொன்னதையும் கொடுக்க முதல்வர் மறுக்கிறார் என கேள்வி எழுப்பினார்.
தன்னை டெல்டாகாரன் என எப்போதும் பேசி, மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் ஏன் உரிய நிவாரணம் கொடுக்கவில்லை.ஆனால் விவசாயிகளும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி ஹெக்டேர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
காவிரி பிரச்சனையை தீர்க்க ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தது. திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் சார்பாக பெங்களூரில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பங்கு பெற்றனர் ஏன் அவர்களை சந்தித்து மனிதாபிமான அடிப்படையில் கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும். காங்கிரஸ் அரசு தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை வைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் ஏன் கர்நாடக முதல்வரையும், துணை முதல்வரும் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
அதிமுகவை பொறுத்தவரை, தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி தமிழக நலன் என்று வருகிறபோது, தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் செய்ததில்லை. அதிமுக கொள்கை தமிழகத்தின் நலனுக்கு பாதிக்க பாதிப்பு வரும் என்றால் பிஜேபியை கீழே இறக்கி காட்டியவர் ஜெயலலிதா.
ஸ்டாலின் கபட நாடாக ஆடுவதை விட்டுவிட்டு உண்மையிலேயே இந்த அரசுக்கு காவிரி பிரச்சினையிலும் விவசாயிகளின் பிரச்சனைகளிலும் உண்மைகள் அக்கறை இருக்குனானால் எடப்பாடி பழனிசாமி கூறியதைப் போல பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அடுத்தபடியாக குருவை சாகுபடி வீணான நிலையில் அடுத்து வரும் சாகுபடிக்கு அரசு ஊழிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். காவிரி நீரை பெற்று தருவதற்கு உண்மையான அக்கறையோடு இந்த அரசு செயல்பட வேண்டும். தமிழக அரசுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி பேசுவதற்கு ஏன் தயக்கம் ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அனைத்து கட்சி குழுவோடு சென்று ஒன்றிய அரசு சந்திக்கிறார்கள் ஆனால் தமிழக அரசோ எதுவும் செய்யவில்லை. உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சர் ஆனபோது பிரதமரிடம் நேரம் வாங்கி சந்தித்த உதயநிதி ஏன் தற்போது காவிரிக்காக ஏன் சந்திக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் தமிழ்நாட்டுக்கு துரோகத்தை செய்து வருகிறார். உடனடியாக தண்ணீர் தர மறுக்கிற காங்கிரஸ் கர்நாடகா காங்கிரஸ் அரத்தை கண்டிக்க வேண்டும். ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் கர்நாடகா காங்கிரஸ் அரசை கண்டிக்கிறோம் என தீர்மானம் ஏற்ற முடியுமா என கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி மீது சேற்றை வாரி பூசுவதை விட்டுவிட்டு முதல்வர் என்கிற உண்மையான அக்கறையோடு முதல்வர் டெல்டா காரன் என்பது உண்மை என்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையான நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஊழல் செய்த அமைச்சர்களை காப்பாற்ற துடிக்கும் இந்த அரசு விவசாயிகளை காப்பாற்ற ஏன் நடவடிக்கை எடுக்க தவருகிறது இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என பேசினார்.