மேலும் அறிய

PMK: ஒரு நிமிடம் மட்டுமே பேசிய ராமதாஸ்..! நம்மை விட்டால் வேறு வழியில்லை என்ற அன்புமணி..!

பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ் ஒரு நிமிடம் மட்டுமே பேசியது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம் 2023-ஆம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் பா.ம.க.வின் மாநில பொதுக்குழு கூட்டம் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நாவற்குளம் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பாமக முன்னாள் தலைவர் ஜி.கே மணி, பேராசிரியர் தீரன், வழக்கறிஞர் பாலு, மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்குழுவில் மறைந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பெண் மோடிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் வளர்ச்சி குறித்தும் நிர்வாகிகளின் உழைப்பு சம்பந்தமாக பாமக நிறுவனர் ராமதாஸ் இயற்றிய ஆத்திசூடியை அறிமுகப்படுத்தி வாசித்து காட்டினார். தொடர்ந்து பாமக பொதுக்குழுவின் தீர்மானங்கள் வாசிக்கப் பட்டன.

இதனை தொடர்ந்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,

மே 5 ம் தேதி  சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி மீண்டும் வன்னியர் சங்க மாநாடு நடத்தப்படும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பிரதமர் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். ஒரு கட்சி என்பது எம்பி,எம்.எல்.ஏ.க்களை வைத்து அல்ல, மக்களுக்கு என்ன செய்துள்ளனர் என்பது தான் முக்கியம். பா.ம.க. இல்லை என்றால் தமிழகத்திற்கு சமச்சீர் கல்வி வந்து இருக்காது, லாட்டரி ஒழிந்து இருக்காது, இந்தியாவிற்கே நாம் வழிகாட்டி, 108 ஆம்புலன்ஸ் நாம் கொண்டு வந்தது, ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் மக்களுக்காக உழைக்கிறோம் என்று கூறினார்.

காலையில் நிறுவனர் அறிக்கை விட்டால் மாலையில் தீர்வு காணப்படுகிறது. அய்யா கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். பா.ம.க. சேர்ந்து விடுமா..? என கேட்கிறார்கள். நமது இலக்கு தமிழக வளர்ச்சி தான் என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார். அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் வேளாண் மண்டலம் அமைக்க கோரினோம். பா.ம.க.வின் வெற்றி இது. ஆனால் அங்கிகாரம் கிடைக்கவில்லை. டெல்டா மக்களே ஓட்டு போடலை. நம்ம கூட்டணிக்கே போடலை. இப்ப புரிந்து வருகிறார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

வேறு வழியில்லை:

இப்ப நமக்கு ஏத்த அரசியல் சூழல்  இருக்கிறது. தமிழகத்தில் கட்சிகள் உடைந்து கிடக்கிறது. சில கட்சிகள் விளம்பரம் செய்கிறார்கள். தினமும் மீடியா பார்கிறார். வாட்ச் காட்டுகிறார். நமக்கு அது வேண்டாம். வளர்ச்சியை நோக்கி செல்வோம். அங்கீகாரம் வருகிறது. நம்மை விட்டால் தமிழக மக்களுக்கு வழியில்லை. இரு கட்சிகளையும் 50 ஆண்டு காலம் மக்கள் பார்த்து வெறுத்து விட்டனர். அ.தி.மு.க. 4 துண்டாகி விட்டது. தி.மு.க. விளம்பரம் தான். அடுத்து நாம் தான் மக்களுக்கான கட்சி. 35 ஆண்டுகளாக கட்சியை அய்யா வெற்றி கரமாக நடத்தி வருகிறார் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராடுகிறோம். தமிழகத்தில் வன்னிய சமூதாயம் 20% தாழ்த்தப்பட்டோர் 20% தான்..இதில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறி வருகின்றனர். ஆனால் வன்னிய சமூதாயம் முன்னேற வில்லை. அந்த ஒரே காரணத்திற்கு கூட்டணி சேர்ந்தோம். 10.5% கிடைத்தது. ஆனால், நீதிமன்றம் தலையிட்டு ரத்து செய்தது. இது பற்றி பலமுறை முதல் அமைச்சரிடம் பேசியுள்ளார். நானும் பலமுறை பேசியுளேன். இதில் ஜாதி பிரச்னை இல்லை. ஒரு சமுதாய பிரச்னை. இன்னும் ஆறு மாதத்தில் தமிழகத்தில் 10.5 சதவிதம் வரும்.

தரம் குறைவான லிக்னைட்:

நிலக்கரியை விட தரம் குறைவான லிக்னைட்டை எடுக்க 25,000 ஏக்கர் விளைநிலங்களை பிடுங்க முயற்சி எடுக்கிறார்கள். நாம் தான் தடுக்க போராடி வருகிறோம். இப்ப தான் சில பேர் நாங்க தான் என வருகிறார்கள். 25,000 ஏக்கர் நிலத்தை பிடுங்க முயற்சி நடக்கிறது. இதற்கு இரண்டு அமைச்சர்கள் வேறு ஆதரவு தருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் இருப்பதால் செய்கிறீர்களா....? இதிலுமா ஜாதி.? விரைவில் தனியார் கைக்கு NLC போக இருக்கிறது. "A" என துவங்கும் நிறுவனம் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஒரு மாதத்தில் 9 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சட்ட அமைச்சர் விளக்கம் கொடுத்து விட்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் தினமும்  200 கோடி ரூபாய் லாபம் பார்க்கிறார்கள். உயிரும் போகிறது. இதன் பிறகு ஆளுநருக்கு உணர்வில்லையா..? சந்தேகம் இருந்தால் விளக்கம் கேட்டு கோப்பை அனுப்பி இருக்கலாம்.

தமிழகம்-புதுச்சேரியிலும் பா.ம.க. நிர்வாகிகள் வேகமாக நியமிக்க படுகிறார்கள். இது விரைவில் முழுமை பெரும். 40 தொகுதிகளிலும் மாஸ் அட்டாக் என அய்யா உத்தரவிட்டுள்ளார். அதனை நோக்கி நாம் செல்கிறோம். ஒவ்வொரு எம்.எல்.ஏ. தொகுதிகளிலும் 3 நாட்கள் நான் செல்கிறேன். தேர்தலுக்கு தயாராகிறோம். இறுதியாக அய்யா அனுமதி கொடுத்தால் வரும் மே 5 ம் தேதி  சித்ரா பவுர்ணமி. அன்றைய தினம்  வன்னியர் சங்க மாநாடு நடத்தலாம். இவ்வாறு அவர் பேசினார். 

இதனை தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்....

"விடியலுக்காக காத்திருக்கிறோம்.. விடியலுக்கு வெகுதூரமில்லை" என மட்டும் கூறி பா.ம.க. பொது குழுவில் தனது நிறைவுரை டாக்டர்  ராமதாஸ் முடித்து கொண்டார். பா.ம.க. பொது குழுவின் துவக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தயாரித்துள்ள ஆத்திச்சூடியை வாசித்தார். பொது குழுவில் நிறுவனர் ராமதாஸ் நிறைவுரையாற்றினார். ஆனால் சில வார்த்தைகளிலேயே அவர் முடித்து கொண்டார். அதுவும் தன்னுடையே ஆத்திசூடியின் 45யை மட்டும் படித்து முடித்து கொண்டார். விடியலுக்காக காத்திருக்கிறோம்... விடியலுக்கு வெகுதூரமில்லை என மட்டும் கூறி டாக்டர் ராமதாஸ் புறப்பட்டார். இந்த ஒரு நிமிட பேச்சு பாமக தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
Embed widget