’திமுகவினர் தரம் தாழ்ந்துள்ளனர்’ - ஆ. ராசாவின் பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..

”இப்படி தரமற்ற முறையில் பேசுவதை திரு. ஆ. ராசா அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவரை கடுமையாக எச்சரிக்கிறேன்" என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக தேர்தல்களம் அனல்பறந்து வரும் இந்த நேரத்தில், வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு வாக்கு சேகரிக்கவரும் அரசியல் தலைவர்கள் சிலர் பொதுவெளியில் பேசும் கருத்துக்கள் கேட்போரை முகம்சுளிக்க வைக்கின்றது. பெண்களை குறித்த கேலிப்பேச்சுக்கள், பிற கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி அவர்கள் குடும்பத்தார் குறித்த அவதூறான வார்த்தைகள் என்று நாகரிகமற்ற முறையில் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருகின்றது. 

இந்நிலையில் தி.மு.க-வை சேர்ந்த ஆ. ராசா-வின் தமிழக முதல்வர் குறித்த அவதூறான பேச்சு கடும்கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் "கழகத்தின் மரபையும், மாண்பையும் மனதில் வைத்து பேசுமாறு" கோரிக்கைவிடுத்தார். தற்போது ஆர். ராசாவின் பேச்சுக்கு கட்டணம் தெரிவித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.     

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை நாகரிகமற்ற முறையில் விமர்சித்து பேசிய திரு. ஆ. ராசாவிற்கு மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கடும் கண்டனங்கள். <a href="https://t.co/grkb6oULtf" rel='nofollow'>pic.twitter.com/grkb6oULtf</a></p>&mdash; AIADMK (@AIADMKOfficial) <a href="https://twitter.com/AIADMKOfficial/status/1375868409515155459?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>March 27, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

அந்த அறிக்கையில் "மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை நாகரிகமற்ற முறையில் தரக்குறைவாக பேசிய திரு. ஆர். ராசாவுக்கு அஇஅதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பதவிவெறியில் அவரது உளறல் மூலம் எந்த அளவிற்கு அவரும் திமுகவும் தரம் தாழ்ந்துள்ளனர் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்." 

"தரக்குறைவான சொற்களால் வீசப்படுவதால் பேசப்படுபவர் ஒருபோதும் குறைந்து போவதாய் அர்த்தமல்ல. மாறாக அது பேசுபவருடைய அறிவீனத்தை பிரதிபலிக்கும். மக்கள் பிரதிநிதியாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர்கள் சபை நகரிகத்துடனும், அரசியல் மாண்புடனும் நடந்துகொள்ள வேண்டும். தனது சுயவாழ்வில் முதலில் தாம் சரியாக இருக்கிறோமா என்பதை நினைவில் நிறுத்திக்கொண்டு பேச வேண்டும் இனியேனும் இப்படி தரமற்ற முறையில் பேசுவதை திரு. ஆ.ராசா அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags: dmk aiadmk election campaign OPS TN Elections Raja O Panneer Selvam

தொடர்புடைய செய்திகள்

மும்பை கனமழை : குழிக்குள் கார் மூழ்கும் காட்சிகள் : சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ !

மும்பை கனமழை : குழிக்குள் கார் மூழ்கும் காட்சிகள் : சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ !

TN Corona Update: தமிழ்நாட்டில் இன்று 15,000-க்கு கீழ் கொரோனா தொற்று..!

TN Corona Update: தமிழ்நாட்டில் இன்று 15,000-க்கு கீழ் கொரோனா தொற்று..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

டாப் நியூஸ்

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!