Morning headlines: காலை 8 மணி முக்கியச் செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரி லால் ஏற்றுக்கொண்டார். 15ஆவது தமிழக சட்டப்பேரவை கலைப்பு.
உள்ளூர் முதல் உலகம் வரையிலான பெருஞ்செய்திகளை குறுஞ்செய்திகளாக உங்களுக்கு வழங்கும் காலை 8 மணி தலைப்புச் செய்திகள் இதோ:
*தமிழ்நாட்டில் வரும் 6ஆம் தேதி முதல் மேலும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு. மளிகை, காய்கறி கடைகள், குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி. ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க தடை. வரும் 6ஆம் தேதி காலை 4 மணி முதல் 20ஆம் தேதி காலை 4 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
*தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்.
*அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு உதவ வேண்டும் - தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் வலியுறுத்தல்
*முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரி லால் ஏற்றுக்கொண்டார். 15ஆவது தமிழக சட்டப்பேரவை கலைப்பு.
*திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை கூடுகிறது. திமுகவின் சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வாகிறார்.
*சென்னையில் வரும் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சி தலைவர் குறித்த ஆலோசிக்க வாய்ப்பு.
*புதுச்சேரியில் ஆட்சி அமைக்க என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உரிமை கோரினார். பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை துணை நிலை ஆளுநரிடம் வழங்கினார்.
*.மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி நாளை மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்.
*மேற்கு வங்கத்தில் பாஜவினர் மீது தாக்குதலை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் - பாஜக அறிவிப்பு
*கர்நாடக மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு.
*கொரோனா காரணமாக மே மாதம் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
*5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் 17 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு
*லேசான கொரோனா அறிகுறிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம். சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை
*வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கொல்கத்தா - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு. மும்பை - ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்.
*மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.