(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Headlines Today: காலை தலைப்புச் செய்திகள்: உள்ளூர் முதல் உலகம் வரை
24 ஏப்ரல் 2021 காலை 6 மணி வரையிலான முக்கிய தலைப்புச் செய்திகளின் தொகுப்பு இதோ.
உள்ளூர் முதல் உலகம் வரையில் இன்றைய நாளின் துவக்கத்திற்கான முக்கிய தலைப்புச் செய்திகளின் தொகுப்பு இதோ.
* தமிழ்நாட்டில் இன்று இரவு முதல் நாளை மறுநாள் அதிகாலை வரை முழு ஊரடங்கு. முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அழைக்க தமிழக அரசு வேண்டுகோள்
* ஊரடங்கின்போது மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் திறக்கக்கூடாது. பேருந்துகள் இயங்காது. அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
* முழு ஊரடங்கின்போது சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும். ஒன்று முதல் இரண்டு மணி நேர இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
* புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இரண்டு நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
*ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியில் ஒரே நாளில் 25 பேர் உயிரிழப்பு. மகாராஷ்டிராவில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு
* வரும் மே, ஜூன் மாதங்களில் 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ இலவச ரேஷன் - மத்திய அரசு அறிவிப்பு
* ஆந்திர பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
* உச்சநீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று பதவியேற்பு
* தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை. வளிமண்டல சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்
* தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஒத்திவைப்பு. மாணவர்களுக்கு எந்த வகுப்புகளையும் நடத்தக்கூடாது பள்ளிகளுக்கு உத்தரவு
* கொரோனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து பணியாற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு. கள்ளச்சந்தையில் ஆக்ஸிஜன், மருந்து விற்பனையை தடுக்க மாநிலங்களுக்கு உத்தரவு
* மே 2ஆம் தேதி காலை 8 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவிப்பு
* மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும். லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் - சென்னை மாநகராட்சி ஆணையர்
* மதுரை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவால் விமானங்கள் ரத்து
* கொரோனா வைரஸ் தொற்று பரவலை சமாளிக்க இந்தியாவுக்கு உதவ தயார் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் அறிவிப்பு
* மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி
* இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்
இது போன்ற அடுத்தடுத்த அப்டேட் செய்திகள் சுருக்கமாகவும், தெளிவாகவும் காண ABP நாடு இணையத்தில் இணைந்திருங்கள்.