மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை மாணவர்கள் மகிழ்ச்சி!
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று 13.11.2024 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி முதல் தொடங்கி தீவிரமடைந்துள்ளது. இத்தனை நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. அது போல் வெயிலும் மாறி மாறி இருந்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில தினங்களுக்கு இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஓரிரு இடங்கிளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் அதிகளவு கனமழையது பெய்து வருகிறது. தொடர்ந்து மழை நீடிக்கு வாய்ப்புள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டள்ளார். இதனால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா?
கடந்த 24 மணிநேரத்தில் மழையளவு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில் - 39 மில்லிமீட்டர், மணல்மேடு - 40 மில்லிமீட்டர், சீர்காழி - 136 மில்லிமீட்டர், கொள்ளிடம் - 134.40 மில்லிமீட்டர், தரங்கம்பாடி - 59 மில்லிமீட்டர், செம்பனார்கோயில் - 40 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சம் சீர்காழியில் 14 சென்டிமீட்டர் மழையும், குறைந்த அளவாக மயிலாடுதுறையில் 4 சென்டிமீட்டர் மழையானது பெய்துள்ளது. மாவட்ட முழுவதும் மொத்தமாக 48 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 7.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.