மேலும் அறிய

சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 

Chennai Ganja: கஞ்சா போதை பொருளை வாங்க வந்திருந்த இரண்டு பேர், உள்ளிட்ட மூன்று பேரை, சென்னை மாநகர கஞ்சா போதை தடுப்பு சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை.

தாய்லாந்து நாட்டிலிருந்து டெல்லி வழியாக, உள்நாட்டு விமானத்தில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.80 லட்சம் மதிப்புடைய, 1.5 கிலோ உயர் ரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா போதைப் பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா போதைப்பொருள்

தாய்லாந்து நாட்டிலிருந்து டெல்லி வழியாக, சென்னைக்கு கஞ்சா போதைப்பொருள், கடத்தி வரப்படுவதாக, சென்னை மாநகர கஞ்சா போதை பொருள் தடுப்பு சிறப்புப் பரிவு போலீசாருக்கு நேற்று நள்ளிரவில் தகவல் கிடைத்தது. இதை அடுத்து கஞ்சா போதை தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் தனிப்படை நேற்று நள்ளிரவில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து, டெல்லியில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். 

இந்தநிலையில் இன்று காலை 6.30 மணிக்கு, டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கியது. அதில் வந்த பயணிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தபோது, சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது பாரூக் (30) என்பவர் டெல்லியில் இருந்து, இந்த விமானத்தில் சென்னை வந்தார். அவரை பிடித்து விசாரித்தனர்.

உயர்ரக கஞ்சா

அவர் தாய்லாந்து நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்துவிட்டு, அங்கிருந்து உள்நாட்டு விமானத்தில் சென்னை வருவது தெரிய வந்தது. இதை அடுத்து பயணி முகமது பாரூக் உடைமைகளை முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவருடைய உடமைகளுக்குள் ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது, பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா சுமார் 1.5 கிலோ இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ. 80 லட்சம்.

இதை அடுத்து தனிப்படை போலீசார், முகமது பாரூக் கைது செய்து, மேலும் விசாரித்தனர். அப்போது இந்த போதைப் பொருளை தாய்லாந்து நாட்டிற்கு சென்று வாங்கி வரும்படி, சென்னையைச் சேர்ந்த இரண்டு பேர், என்னை குருவியாக தாய்லாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதோடு தாய்லாந்து நாட்டில் இருந்து நேரடியாக சென்னை வராமல், டெல்லி வழியாக சென்னைக்கு வரும்படியும் கூறி இருந்தனர். அதன்படி நான் டெல்லி வழியாக, உள்நாட்டு விமானத்தில் சென்னைக்கு வந்தேன் என்று கூறினார்.

தனிப்படை போலீசார்

இதை அடுத்து கைது செய்யப்பட்ட பயணி முகமது பாரூக் செல்போனை ஆய்வு செய்தபோது, அவருடைய செல்போனிலிருந்து, இரண்டு பேரிடம் தொடர்ச்சியாக பேசி இருந்தார். இதை அடுத்து தனிப்படை போலீசார் முகமது பாரூக்கை, அந்த எண்களோடு தொடர்பு கொண்டு பேசி, சென்னை விமான நிலையத்துக்கு வரவழைத்தனர். அதன்படி பாருக் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதும், சென்னையைச் சேர்ந்த கஞ்சா போதை கும்பலைச் சேர்ந்த 2 பேர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கு சாதாரண உடையில் நின்று கண்காணித்துக் கொண்டிருந்த தனிப்படை போலீசார், அவர்களையும் மடக்கிப் பிடித்தனர். 

அதன் பின்பு அவர்களிடம் விசாரித்த போது, இந்த கஞ்சா அதிக போதை உடையது. மிகவும் விலை உயர்ந்தது. கல்லூரி மாணவர்கள்,உயர் வர்க்கத்தினர், இந்த கஞ்சா போதையை பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இது கடத்திக் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தனர். 

80 லட்சம் மதிப்பு

இதை அடுத்து தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும், சென்னை மாநகர காவல் ஆணையரகத்துக்கு அழைத்து சென்று, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் இருந்து டெல்லி வழியாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட உயர்ரக போதை பொருள் ரூ. 80 லட்சம் மதிப்புடையது, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, சென்னையைச் சேர்ந்த கஞ்சா போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Embed widget