Smartphone Sales: உலகளவில் டாப் 10 மொபைல் விற்பனை லிஸ்ட் இதோ.! ஆதிக்கத்தில் ஐபோன்; டஃப் கொடுத்த சாம்சங்
Top 10 Selling Smartphones: 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், உலகளவில் அதிகம் விற்பனையான செல்போன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஆப்பிள் முதலிடத்தை பிடித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
டாப் 10ல் ஐபோன்கள்:
2024 ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டில், உலக அளவில் விற்பனையான செல்போன்கள் குறித்தான தகவலை Counterpoint Research இன் குளோபல் ஹேண்ட்செட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த் தகவல் அடிப்படையில் ஐபோன் 15 தொடர் மாடல்கள், முதல் மூன்று இடங்களைப் பிடித்தது. இதற்கிடையில், இந்த பட்டியலில் அதிக இடங்களைப் சாம்சங் பிடித்தது. குறிப்பாக 2018 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக டாப் 10 தரவரிசையில் Galaxy S இடம் பெற்றுள்ளது. டாப் 10 விற்பனையாகியுள்ள மொத்த ஸ்மார்ட்போன்களானது, மொத்த விற்பனை சந்தையில் 19 சதவீத பங்களிப்பாகும்.
ஆதிக்கம் செலுத்தும் ஐபோன்கள்:
Counterpoint Research இன் குளோபல் ஹேண்ட்செட் மாடல் விற்பனை கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், ஐபோன் 15 உலகிலேயே அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக இருந்தது என தெரிவிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து iPhone 15 Pro Max மற்றும் iPhone 15 Pro ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த டாப் 10 பட்டியலில், ஆப்பிள் நிறுவனமானது, 2024 ஆம் ஆண்டில் மூன்றாவது காலாண்டில், ஐபோன் 15 உலகிலேயே அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக இருந்தது.
அதை தொடர்ந்து iPhone 15 Pro Max மற்றும் iPhone 15 Pro ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன. ஐபோன் 14 ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில்,. மொத்தத்தில், ஆப்பிள் நான்கு இடங்களைப் பிடித்து ஆதிக்கம் செலுத்துவதை பார்க்க முடிகிறது.
இந்த விற்பனை தரவுகளானது, உயர்நிலை ஸ்மார்ட்போன்கள் மீதான பயனர் விருப்பம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. மூன்றாம் காலாண்டில் ப்ரோ வகைகள், மொத்த ஐபோன் விற்பனையில் பாதிக்கு பங்களித்தது, இதுவே முதல் முறையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் ஆதிக்கம்:
மறுபுறம், டாப் 10 பட்டியலில் சாம்சங் நிறுவனத்தின் அதிக ஸ்மார்ட்போன்கள் இடம் பெற்றுள்ளன; ஐந்து இவற்றில் நான்கு சாதனங்கள் பட்ஜெட் ஏ-வரிசையைச் சேர்ந்தவை. இருப்பினும், Samsung Galaxy S24 ஆனது பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டிலிருந்து முதல்முறையாக டாப் 10 தரவரிசையில் நுழையும் முதல் Galaxy S-தொடர் சாதனமாக மாறியது.
ஆப்பிள் மற்றும் சாம்சங் இரண்டும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் உயர்மட்டத்தில் தங்கள் நிலைகளைத் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து Redmi 13C 4G என்ற மொபைல் போனும் இடம் பெற்றுள்ளது. இது தரவரிசையில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.