மேலும் அறிய

நீங்களா மூடுறீங்களா? இல்ல நான் மூடட்டுமா? - மயிலாடுதுறையில் அதிரடி காட்டும் டிஎஸ்பி 

மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபானக்கடையில் அனுமதியின்றி இயங்கிய மதுபானக் கூடத்துக்கு சீல் வைத்து, இருவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் 38 பார்களுக்கும் சீல் வைத்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவிலக்கு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி 

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் கடந்த நவம்பர் 21-ம் தேதி பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் கஞ்சா, சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையை தடுக்க அவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பொறுப்பேற்ற ஒரேநாளில் சட்டவிரோத மது மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்ட 12 பேரை அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து கடத்தல் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தார். இதில் தொடர்புடைய பெண்கள் 3 பேர் உள்பட 12 பேரில் 3 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளி மாநில மது, சாராயம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இந்த சோதனை தொடரும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அதனை கைவிட்டு, திருந்தி வாழ வேண்டும் என டிஎஸ்பி சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நீங்களா மூடுறீங்களா? இல்ல நான் மூடட்டுமா? - மயிலாடுதுறையில் அதிரடி காட்டும் டிஎஸ்பி 

மயிலாடுதுறை நகரில் வெளிமாநில மதுபாட்டில்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. அதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பேற்ற சுந்தரேசன் மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைக்கு காலை 9.30 மணியளவில் சென்று, அங்கு வெளிமாநில மது பாட்டில்கள் அல்லது போலி மதுபான பாட்டில்கள் உள்ளதா? என்று அவர் சோதனை மேற்கொண்டார். 

நீங்களா மூடுறீங்களா? இல்ல நான் மூடட்டுமா? - மயிலாடுதுறையில் அதிரடி காட்டும் டிஎஸ்பி 

பின்னர் அங்கு இயங்கி வந்த மதுபானக் கூடத்தை (பார்) காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் ஆய்வு செய்தார். அப்போது உரிமம் பெறாமல் மதுபானக்கூடம் (பார்) நடத்தப்படுவதை கண்டறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் அந்த மதுபானக்கூடத்தை மூடி சீல் வைத்தார். மேலும் அங்கு வேலை செய்து வந்த 52 வயதான செந்தில் மற்றும் 55 வயதான முருகன் ஆகிய 2 பேரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நீங்களா மூடுறீங்களா? இல்ல நான் மூடட்டுமா? - மயிலாடுதுறையில் அதிரடி காட்டும் டிஎஸ்பி 

மேலும் இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கிவரும் நிலையில், அவற்றில் 38 கடைகளில் மதுபானக் கூடங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாகவும், அவற்றை உடனடியாக மூடவேண்டும், மூடாவிட்டால் கைது மற்றும் பார்களை சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யார் இந்த டிஎஸ்பி சுந்தரேசன்..?

காஞ்சிபுரத்தில் நிலம் விற்கும் விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்துாரி, 63, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, அதே மாவட்டத்தைச் சேர்ந்த, ம.தி.மு.க., முன்னாள் மாவட்ட செயலர் 65 வயதான வளையாபதி, அ.தி.மு.க., பிரமுகர் 52 வயதான பிரபு, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவல்துறையினர், காஞ்சிபுரம் நத்தப்பேட்டையில், பயன்பாட்டில் இல்லாத காவலர் குடியிருப்பில் வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு இருவரும் மருத்துவ சிகிச்சை பெற்று உடல் நலன் தேறினர்.

நீங்களா மூடுறீங்களா? இல்ல நான் மூடட்டுமா? - மயிலாடுதுறையில் அதிரடி காட்டும் டிஎஸ்பி 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

அதேபோல, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின், ரவுடிகள் திருவேங்கடம், காக்காதோப்பு பாலாஜி, சீசிங் ராஜா ஆகியோர் காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக, மாநில மனித உரிமை கமிஷன் விசாரணையில் இறங்கியது. அங்கு பணியாற்றிய டி.எஸ்.பி., சுந்தரேசன் விசாரித்து, மாநில மனித உரிமைகள் கமிஷனுக்கு முதற்கட்ட அறிக்கை சமர்ப்பித்துள்ளார். 

காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டிய டிஎஸ்பி 

அத்துடன், காவல்துறையினரின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக, அவர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 -ம் தேதி, மாநில மனித உரிமை கமிஷன் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த சுந்தரேசன், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அளித்த அறிக்கை எல்லாம், அரசுக்கு பாதகமாக இருப்பதால், இடம் மாற்றப்பட்டு இருப்பதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
Fengal Cyclone LIVE: கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Red Alert: நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; எங்கெல்லாம் அதி கனமழைக்கு வாய்ப்பு? வானிலை சொல்வது என்ன?
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Red Alert: நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்: வானிலை அப்டேட் இதுதான்!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Chennai Rain Alert: ஃபெங்கல் புயல்; நவ.29, 30-ல் அடித்து வெளுக்கப்போகும் கனமழை- வெதர்மேன் எச்சரிக்கை!
Embed widget