Mayiladuthurai Power Shutdown (17.12.24): நல்லா பார்த்துக்கோங்க, அப்புறம் வருத்தப்படாதீங்க..! மயிலாடுதுறையில் இங்கெல்லாம் நாளை மின்தடை
Mayiladuthurai Power Shutdown 17.12.24 : மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (17.12.24) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
அந்த வகையில் நீடூர் துணை மின் நிலையத்திற்கு பகுதிகளில் இன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நீடூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான நீடூர், மல்லியகொள்ளை, வில்லியநால்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழி தேவன், கங்கணாபுத்தூர், மேலநல்லூர், நடராஜபுரம், கீழமருதநல்லூர், மேலமருதநல்லூர், பொன்மாசநல்லூர் உள்ளிட்ட ஊர்களும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மயிலாடுதுறை இயக்குதல் மற்றும் பராமரித்தல் உதவி செயற் பொறியாளர் கலியபெருமாள் தெரிவித்துள்ளார். ஆகையால் பொதுமக்கள் அனைவரும் அதற்கேற்ப தங்கள் மின் தேவையினை பூர்த்தி செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மற்றொரு பகுதியில் மின் நிறுத்தம்
இதேபோன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் ரேணுகா விடுத்துள்ள செய்தி குறிப்பில், பாலையூர், துணைமின் நிலையத்தில் 17.12.2024 செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பாலையூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பாலையூர், பருத்திக்குடி, காரனூர், நக்கம்பாடி, மாந்தை, கங்காதரபுரம், தேரழந்தூர், கோமல், கள்ளிக்காடு, பெரட்டக்குடி, கந்தமங்கலம், வடமட்டம், காஞ்சிவாய், கோனேரிராஜபுரம் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் நண்பகல் 05.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























