Power Shutdown: உஷார் அம்மா உஷாரு... உஷாரய்யா உஷாரு... நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்...!
Mayiladuthurai Power Shutdown 12.12.24 : மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (12 12.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அல்லது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
சீர்காழி கோட்ட செயற்பொறியாளர் செய்தி குறிப்பு
அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய சீர்காழி கோட்ட செயற் பொறியாளர் வள்ளிமணளான் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; மணல்மேடு துணை மின்நிலையத்தில் நாளை 12.12.2024 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மணல்மேடு துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் மின் பாதையான மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், காளி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், சித்தமல்லி, வடவாஞ்சார், திருச்சிற்றம்பலம், திருவாளப்புத்தூர், வரதம்பட்டு, நமச்சிவாயபுரம், பாண்டூர் ஆத்தூர் ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















