Mayiladuthurai Power Shutdown (09.10.2025) :மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பவர் கட் எங்கெல்லாம் தெரியுமா..?
Mayiladuthurai Power Shutdown 09.10.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கில், மணல்மேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்றைய தினம் வியாழக்கிழமை (09.10.2025) காலை முதல் மாலை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் மின்வாரியத்தின் இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் பிரிவின் செயற்பொறியாளர் (பொறுப்பு), மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மணல்மேடு பகுதிகளில் பாதிப்பு
மணல்மேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணல்மேடு துணை மின் நிலையத்தால் மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்
மணல்மேடு துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் கீழ் கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது:
* மணல்மேடு
* இராதாநல்லூர்
* கிழாய்
* கடலங்குடி
* திருமங்கலம்
* காளி
* இளந்தோப்பு
* பட்டவர்த்தி
* மண்ணிப்பள்ளம்
* சித்தமல்லி
* வடவாஞ்சார்
* திருச்சிற்றம்பலம்
* திருவாளப்புத்தூர்
* வரதம்பட்டு
* நமச்சிவாயபுரம்
* ஆத்தூர்
* நாரயணமங்கலம்
* பாண்டூர்
மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
பராமரிப்பின் அவசியம் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மின்தடையில்லா சேவையை எதிர்காலத்தில் உறுதி செய்யவும், புதிய தொழில்நுட்பங்களைச் சரிபார்க்கவும் இந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மிகவும் அவசியம் என்று மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த எட்டு மணி நேர மின்நிறுத்தம் காரணமாக மணல்மேடு சுற்றியுள்ள பகுதிகளில் அன்றாட வாழ்க்கை, சிறுதொழில்கள் மற்றும் நீர் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான நீர் மற்றும் மின்சார வசதியைப் பேட்டரி, இன்வெர்ட்டர் மூலம் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய அறிவிப்பு
மேலும், அன்றைய தினம் மின்நிறுத்தம் செய்வது மின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது. பொதுமக்கள் இந்தத் தகவலைத் தெரிந்துகொண்டு மின்வாரியத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரங்கள்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.






















