மயிலாடுதுறை நீதிமன்றத்தில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு - காரணம் என்ன?
முன்விரோதம் காரணமாக கடந்த 2020ல் பிப்ரவரி 16ம் தேதி வீட்டில் இருந்த சரவணனிடம் ராமச்சந்திரன், செந்தில்குமார், மாதவன், ரஞ்சித் ஆகியோர் மீண்டும் பிரச்னை செய்து சரவணனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் காவல் சரகம் சின்னகொக்கூர் ஆர்ச் தெருவை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் இறுதி ஊர்வலத்தின் போது பூக்கள் வீசியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் 22 வயதான தக்காளி (எ) சரவணனுக்கும் கலியன் என்பவரின் மகன் கட்டபிள்ளை (எ) ராமச்சந்திரன், செந்தில்குமார் என்பவருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி வீட்டில் இருந்த சரவணனிடம் ராமச்சந்திரன், செந்தில்குமார், மாதவன் (எ) சிவக்குமார், ரஞ்சித் ஆகியோர் மீண்டும் பிரச்னை செய்து சரவணனை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது ராமச்சந்திரன், செந்தில்குமார் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணைனை குத்தியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாலையூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்து கலியன் என்பவரின் மகன்களான 31 வயதான ராமச்சந்திரன், 33 வயதான அவரது அண்ணன் செந்தில்குமார் மற்றும் ஆடுதுறையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன்களான மாதவன் 37 வயதான (எ) சிவக்குமார் அவரது தம்பி 34 வயதான ரஞ்சித் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
Director Muthaiah Son: தன் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்யும் இயக்குநர் முத்தையா: எந்தப் படம் தெரியுமா?
இவ்வழக்கானது மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக 19 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்ட நிலையில், இன்று இறுதி விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் ராமச்சந்திரன், செந்தில்குமார், சிவக்குமார், ரஞ்சித் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மேலும் தலா ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும், அதனை கட்டதவறினால் மேலும் ஒரு மாதகால சிறை தண்டனை விதித்து நீதிபதி ராஜவேலு தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜரானார். தண்டனை பெற்ற நான்கு பேரையும் காவல்துறையினர் திருச்சி கொண்டு சென்று சிறையிலடைத்தனர்.
ALSO READ | Jothimani: விஜய் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்! கலங்குகிறதா தமிழக காங்கிரஸ்! பேசு பொருளாகும் ஜோதிமணி பேச்சு!