மேலும் அறிய

School Education: இனி ப்ளஸ் 2 வரை இலவசமாக உலகத்‌தர கல்வி: கல்வித்துறையுடன் கைகோத்த ஷிவ்நாடார் அறக்கட்டளை!

ஷிவ்‌ நாடார்‌ அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஊரகப் பகுதிகளில்‌ பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய மாணவர்களுக்கு உலகத் தரம்‌ வாய்ந்த கல்வியை வழங்கிட பள்ளிக் கல்வித்துறைக்கும்‌ ஷிவ்‌ நாடார்‌ அறக்கட்டளைக்கும்‌ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்‌ அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில்‌ மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காகச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பள்ளிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்‌

இந்த நிலையில் இன்று (22.02.2024) தலைமைச்‌ செயலகத்தில் தமிழ்நாட்டின்‌ ஊரகப்‌ பகுதிகளைச்‌ சேர்ந்த பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கு 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை உலகத்‌ தரம்‌வாய்ந்த கல்வியை இலவசமாக வழங்கிட பள்ளிக்கல்வித்‌ துறைக்கும்‌, ஷிவ்‌ நாடார்‌ அறக்கட்டளைக்கும்‌ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ மேற்கொள்ளப்பட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்‌ மூலம்‌, சென்னையில்‌ சிவ்‌ நாடார்‌ அறக்கட்டளையால்‌ நிறுவப்படவுள்ள உண்டு உறைவிட பள்ளியில்‌ 6 ஆம்‌ வகுப்பு முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை உலகத்தரம்‌ வாய்ந்த கல்வியை மாணவ / மாணவிகள்‌ பெறுவர்‌.

மாணவிகளுக்கு 50% வாய்ப்பு

தமிழ்நாட்டில்‌ ஊரகப்‌ பகுதியில்‌ உள்ள மாணவர்கள்‌ இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்‌ மூலம்‌, உண்டு உறைவிட பள்ளியில்‌ தங்கி பயின்று சிறந்த கல்வி சூழலையும்‌, கல்வி கற்கும்‌ திறன்‌ மேம்படுவதற்கான பயிற்சியினையும்‌ பெறுவர்‌. மாணவிகள்‌ 50% வாய்ப்பு பெறுவர்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம்‌ மாணவர்கள்‌ தகுதியான உயர் கல்வியைத் தொடர்ந்து பயின்று வருங்காலங்களில்‌ அறிவுத் திறன்மிக்க இளைஞர்களாக வளர்வதற்கு இந்த ஒப்பந்தம்‌ பேருதவியாக இருக்கும்‌.

ஏற்றத்தாழ்வைச் சரிசெய்து சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி

நிகழ்ச்சியில், ’’கல்வியையும் கற்றல் முறையையும் ஜனநாயகப்படுத்தும் செயல் திட்டத்தின் ஓர் அங்கம் இது. அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்வதை எளிதாக்கி, சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வைச் சரிசெய்து சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி இது.

பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலிப் பாடம் கிடைக்கும் என்ற நிலையை மாற்றி, அவற்றை அனைவருக்குமானதாக மாற்றுவதே அரசின் நோக்கம். ஏற்கெனவே செயலி வடிவில் உள்ள மணற்கேணி, தற்போது பெரிய திரைகள் மற்றும் கணினியிலும் பயன்படுத்தும் வகையில் இணையதள வடிவில் வெளியிடப்படுகிறது’’ என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில்‌, பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்‌ துறை செயலாளர்‌ குமரகுருபரன்‌, சிவநாடார்‌ அறக்கட்டளை நிர்வாகிகள்‌ சார்பாக சுந்தர்‌, திரு. பேனர்ஜி மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
மைலேஜ் அரசன்.. டேங்கை நிரப்பு... வண்டியை கிளப்பு! Bajaj Platina 100 விலை, சிறப்புகள் என்ன?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
Embed widget