மேலும் அறிய

மீண்டும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு - எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என குமுறல்....!

விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநருக்கு லாரி உரிமையாளர் உட்பட யாரும் சிகிச்சைக்கு உதவவில்லை என கூறி உடலில் கட்டுகளுடன் தொடர்ந்து ஆறு வார காலமாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறார்.

ஒடிசாவில் விபத்தில் படுகாயம் அடைந்த மயிலாடுதுறையை சேர்ந்த லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் உட்பட யாரும் கண்டுகொள்ளாததால் மருத்துவ சிகிச்சையை தொடர முடியாமல் தவித்து வருவதாக தலை மற்றும் கைகளில் கட்டு போட்டதுடன் தொடர்ந்து ஆறாவது வாரமாக ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து வருகிறார்.

செருதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் ரமேஷ்

மயிலாடுதுறை மாவட்டம்  செருதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கையன் என்பவரது மகன் ரமேஷ். ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணம் ஆகி, நான்கு  குழந்தைகள் உள்ளனர்‌. இவர்  நாமக்கல்லை சேர்ந்த தனியார் லாரி உரிமையாளர் மோகனரங்கம் என்பவரிடம் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். 

மீண்டும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு - எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என குமுறல்....!

விபத்துக்குள்ளான பயோ டீசல் லாரி

இந்த நிலையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு பயோ டீசல் ஏற்றிக்கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளார் . அங்கு ஐஓசி நிறுவனத்தில் பயோ டீசலை கொடுக்கச் சென்ற நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை அடுத்த பத்ராக் பகுதியில் லாரியின் டயர் வெடித்து அதனால் வாகனம் நிலை தடுமாறி முன்னாள் சென்ற மற்றொரு லாரி மீது மோதிய விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் லாரியை ஓட்டிச் சென்ற ரமேஷ் கை மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர். 

மீண்டும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு - எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என குமுறல்....!

வழக்கு பதியாமல் மீட்கப்பட்ட விபத்துக்குள்ளான லாரி

இந்த விபத்து குறித்து அறிந்து அங்கு வந்த லாரி உரிமையாளர் மோகனரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதியாமலும், விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநர் ரமேஷையும் பார்க்காமல் லாரியை மீட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காப்பீடு தொகையும் கிடைக்கவில்லை. பின்னர் உறவினர்கள் ஒடிசா மாநிலத்திற்கு சென்று விபத்துக்குள்ளான ரமேஷை மீட்டு மயிலாடுதுறைக்கு அழைத்து வந்துள்ளனர். 

மீண்டும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு - எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என குமுறல்....!

சிகிச்சையை  தொடர்வதில் சிக்கல் 

தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் ரமேஷ், தற்போது வரை லட்சக் கணக்கில் பணம் செலவு செய்துள்ளதாகவும், இதனால் தற்போது வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக கூறி மருத்துவமனையில் இருந்து கை,  கால் மற்றும் தலையில் கட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வருகை தந்து மனு அளித்தார். மேலும் லாரி உரிமையாளரிடம் நிதியுதவி பெற்று தர வேண்டும் எனவும், மேற்கொண்டு சிகிச்சையை தொடர மாவட்ட நிர்வாகம் ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மருத்துவமனையில் இருந்து காயங்களுடன் வாழ்வாதார காக்க கோரி விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் மனு அளித்த சம்பவம் காண்போரை கண் கலங்க செய்தது. 

மீண்டும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு - எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என குமுறல்....!

மீண்டும் ஆறாவது வாரமாக மனு

இந்நிலையில் மீண்டும் மீண்டும் வாரம் வாரம் அவர் தொடர்ந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் 6 வது வாரமாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். வேலைக்கு செல்ல முடியாமல் நான்கு குழந்தைகள் மனைவியுடன் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றேன். இதுவரை 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். தற்போது 3 வது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால் பணம் இன்றி தவித்து வருகிறேன். ஆகையால் எனது நிலையை உணர்ந்து லாரி உரிமையாளரிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Harini Amarasuriya Profile : தேயிலை தொழிலாளியின் மகள்!இலங்கையை அலறவிட்ட சிங்கப்பெண்!யார் இந்த ஹரிணி?ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: ஸ்கெட்ச் போட்டாச்சு..! தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை - சென்னை வானிலை மையம் அறிக்கை
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Power Cut 19.11.2024: தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எந்த ஏரியாவில் பவர்கட்? முழு பட்டியல்
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Rasipalan November 19: மிதுனத்திற்கு புது நண்பர்கள் வரவு! கடகத்திற்கு பயணம் - உங்களின் ராசிபலன்?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு கைதி எண் ஒதுக்கீடு.! எந்த எண் ஒதுக்கீடு?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Embed widget