மூன்றும் பெண் குழந்தைகளாக பிறந்தது என் தவறா..? - மனைவி எடுத்த விபரீத முடிவு...!
மூன்றும் பெண் குழந்தைகள் என்பதால் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று பெண் குழந்தைகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகர எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பிரபு. இவர் கேரளாவில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 31 வயதான சுகன்யா. இவர்கள் இருவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி இரு வீட்டார் சேர்ந்து திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்பொழுது 10 வயதில் பிரகன்யா 6 வயதில் மதுஸ்ரீ, 3 வயதில் சமிருத்தா ஆகிய மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுகன்யா
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று காலை தனது வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுகன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆணைக்காரன் சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சுகன்யாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார், பைக் வாங்க போறீங்களா? செப்டம்பரில் நல்ல நேரம், நல்ல நாள் எது? முழு விவரம்
இறப்பில் சந்தேகம்
சுகன்யாவின் சகோதரர் சுபாஷ், மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதால் சசுகன்யாவிற்கும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் சுகன்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் சுகன்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், சுகன்யாவின் கணவர் பிரபு மற்றும் அவரது உறவினர்களை கைது செய்யக்கோரி சீர்காழி அரசு மருத்துவமனை எதிரே திடீர் சாலைமறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Crime: பெற்ற மகனையே அடித்துக்கொன்ற தந்தை - ஆயுள் தண்டனை விதித்த நெல்லை நீதிமன்றம்
தகவலறிந்த அங்கு விரைந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுகன்யாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சீர்காழி அரசு மருத்துவனை சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்
இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.