மேலும் அறிய

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை அருகே காணாமல் போன பெண் வாய்க்காலில் கட்டுப்பான பணி நடைபெறும் இடத்தில் தண்ணீர் தேங்கிய பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் காலை கடன் கழிக்க சென்ற பெண் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை காவல்துறையினர் எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாயமான பெண்மணி:

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே திருச்சிற்றம்பலம் ஊராட்சி தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் என்பவரது மனைவி 55 வயதான தேன்மொழி. விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். 

Vairamuthu: உருப்படியான திட்டம் வேண்டும்.. வெளிநாடு செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு

காவல்நிலையத்தில் புகார் 

பல இடங்களில் தேடியும் தேன்மொழி கிடைக்காததால் பின்னர் தேன்மொழி மாயமானது குறித்து மணல்மேடு காவல் நிலையத்தில் கணவர் மகாலிங்கம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மணல்மேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்மணியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். தொடர்ந்து இன்று தெற்கு ராஜன் வாய்க்காலில் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களை பிரிக்கும் டிவைடர் கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில் மழைநீர் தேங்கிய பகுதியில் இருந்து தேன்மொழியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

Manjummal Boys: மஞ்சும்மல் பாய்ஸ் பண மோசடி வழக்கு.. தயாரிப்பாளர் சௌபின் ஷாஹிரிடம் அமலாக்கத்துறை விசாரணை!

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு

இறப்பில் சந்தேகம் 

இதனிடையே அப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீபதி கட்டுமான நிறுவனத்தின் வாகனம் மோதி தேன்மொழி உயிரிழந்ததாகவும், அதனை மறைக்க தண்ணீர் தேங்கிய பகுதியில் சடலத்தை தள்ளி விட்டுள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இயந்திரங்களையும் தாக்கினர். இதில் ஜேசிபி டிரைவர் ஈரோடு பூபாலன் என்பவர் காயமடைந்தார். 

Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு

உறவினர்கள் போராட்டம் 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணல்மேடு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு போராட்ட காரர்கள் உடன்படவில்லை, மேலும் இறந்த தேன்மொழியின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் பெருமாள் என்பவரிடம் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சூழலில் அங்கு வந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடற்கூறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது. 

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் கால்வாயில் சடலமாக மீட்பு - மயிலாடுதுறையில் பரபரப்பு

உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட உடல்

இதனை அடுத்து இறந்த தேன்மொழியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக காவல்துறையினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் கட்டுமான பணி நடைபெற்ற இடத்தில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget