மேலும் அறிய

Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - பாமக சார்பில் அன்புமணி வேட்பாளராக அறிவிப்பு

Vikravandi By Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Vikravandi By Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமக வேட்பாளர் அறிவிப்பு:

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ”சி.அன்புமணி என்பவர் பாமக சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டிடுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் வன்னியர் சங்க நிர்வாகி மற்றும் பாமக மாநில துணை தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதி தேர்தலில் இவர் போட்டியிட்டு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சி. அன்புமணி:

2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாமக தனித்து களம் கண்டபோது, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட சி. அன்புமணி சுமார் 41,428 வாக்குகளை பெற்றார். அதாவது அந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 23.19 சதவிகித வாக்குகளை இவர் பெற்று இருந்தார். இந்நிலையில் தான் விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட, சி. அன்புமணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் யார்?

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியின் விவசாய அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தருமபுரி தொகுதிய்ல் போட்டியிட்டு சுமார் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான்,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாமக சார்பில் சி. அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் யார் போட்டியிட உள்ளார் என்பது தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.  

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எப்போது?

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர்  உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் ஜுலை 10ம் தேதி நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள், ஜுலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடுவோர் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நேற்று தொடங்கியது. தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அதன்படி, வரும் 21ம் தேதி வரை விருப்பமுள்ள நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.  தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் வரும் 24ம் தேதி பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் மற்றும் 26ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
சேலத்தில் சோகம்.... 2 குழந்தைகளுடன் கர்ப்பிணி கிணற்றில் விழுந்து தற்கொலை
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Fengal Cyclone: வந்தது புயல்; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு- வானிலை மையம் எச்சரிக்கை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
Schools Colleges Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? கன மழை அறிவிப்பால் பெற்றோர்கள் கவலை!
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Schools Leave: வெளியான அறிவிப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை- ஆட்சியர் உத்தரவு!
Embed widget