(Source: ECI/ABP News/ABP Majha)
Vairamuthu: உருப்படியான திட்டம் வேண்டும்.. வெளிநாடு செல்லும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்
முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்படுபவர். தான் பாராட்ட விரும்பும் ஒன்றை பற்றி உடனடியாக பதிவுகளை வெளியிடுவது வழக்கம்.
துபாயில் இருக்கிறேன்
— வைரமுத்து (@Vairamuthu) June 15, 2024
எனக்குப் பின்னால்
மலைபோல் தெரிவது
மலையல்ல
பதப்படுத்தப்பட்ட
துபாயின் கழிவுகளை
ஊருக்கு வெளியே கொட்டி
மண்ணிட்டு மூடிய
குப்பைமேடு
இதில்
துர்நாற்றம் இல்லை;
சுகாதாரக் கேடு இல்லை;
சுற்றுச்சூழல் மாசு இல்லை;
நாளை மக்கிய பிறகு
தாவர எருவாகும்
சாத்தியங்கள் உண்டு… pic.twitter.com/EBX4sycTjZ
மேலும், “உருப்படியான திட்டங்கள் தீட்டப்பட்டால் நாடு உயரும்;நாட்டு மக்கள் நலம் பெறுவார்கள் ... இயற்கையை பாதுகாப்போம்;சுற்றுச்சூழலை சுவாசிக்க விடுவோம்” எனவும் இணையவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை கழிவுகளை அகற்றுவதில் அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. முன்னதாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என இருவகையாக கழிவுகளை பெற்று வந்த நிலையில், தற்போது பிளாஸ்டிக் குப்பைகளுக்கு என தனியாக ஒருநாள் ஒதுக்குகிறது. மண்டல வாரியாக நோய்கள் பரவா வண்ணம் சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.