மேலும் அறிய
Advertisement
மார்ச் 22 முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம்
தமிழகத்தில் வரும் 22-ந் தேதி முதல் தீப்பெட்டி தொழிற்சாலைகள் 10 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நூற்றுக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதுதவிர தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக சரக்குகளை ஏற்றுமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், தீப்பெட்டிகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அதிகரித்துள்ளதாலும் தீப்பெட்டி தயாரிப்பில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மூலப்பொருட்கள் விலையேற்றத்தை குறைக்க வேண்டும், லாரிகளுக்கான வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வரும் 22-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion