களைகட்டிய மாசி திருவிழா - திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16ம் தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் மாசி திருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டிற்கான மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்டம் அபிஷேகமும் அதனையொட்டி தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் கோயில் உட்பிராகரத்திலுள்ள செப்பு கொடி மரத்தில் காலை 5.30 கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடி மரம் பீடத்திற்கு பால், மஞ்சள், விபூதி, பன்னீர், தேன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பட்டாடைகளாலும், வண்ண மலர்களாலும் கொடி மரம் பீடமானது அலங்கரிக்கப்பட்டு வேதவிற்பனர்களால் வேத மந்திரங்கள் முழங்க சோடச தீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தினமும் சுவாமியும், அம்பாளும், வெவ்வேறு வாகனத்தில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 16ம் தேதி நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழாக்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்காத நிலையில் இந்த ஆண்டு மாசி திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Local Body Election: காத்திருந்த மாஜி அமைச்சர்... காலை வாரிய வேட்பாளர்... வாடிப்பட்டி வாபஸ் கதை!
வேட்பாளராக அறிவிக்க வெல்லமண்டி நடராஜன் 5 லட்சம் லஞ்சம் கேட்டார் - அதிமுக வட்டச்செயலாளர் புகார்
Today Rasipalan : இன்று எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு உண்டு.? யாருக்கெல்லாம் என்னென்ன பலன்கள்..?