மேலும் அறிய

காஞ்சிபுரம் காவல் நிலையம்: மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்! காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்!

Kanchipuram Police Station: "காஞ்சிபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான மரங்களை அகற்றாமல், புதிய காவல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது கவனத்தில் பெற்றுள்ளது."

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரபுகளை மதிக்கும் வகையில், நூறாண்டு பழமையான மரங்களை வெட்டாமல் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய காவல் நிலையக் கட்டடம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மரங்களை நேசிக்கும் புதிய கட்டடம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம், டி.கே.நம்பி தெருவில் பழமையான விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் இயங்கி வந்தது. சிதிலமடைந்த பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு ₹1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. சுமார் 4,596 சதுர அடியில் இந்த கட்டுமானப் பணிகள் திட்டமிடப்பட்டன.

பொதுவாக புதிய கட்டடங்கள்

பொதுவாக கட்டப்படும்போது இடையூறாக இருக்கும் மரங்கள் அகற்றப்படுவது வழக்கம். ஆனால், இந்த காவல் நிலைய வளாகத்தைச் சுற்றி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிழல் தந்து வரும் 10-க்கும் மேற்பட்ட பழமையான மரங்களை வெட்டக்கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். மரங்களின் அமைப்பிற்கு ஏற்ப, வரைபடத்தில் சிறு மாற்றங்களைச் செய்து, ஒரு மரத்தைக் கூட சேதப்படுத்தாமல் வியக்கத்தக்க வகையில் இப்புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தொடக்கி வைப்பு

கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தைத் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தற்காலிகமாக காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த காவல் நிலையம், இனி இந்த பசுமை சூழ்ந்த புதிய கட்டடத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது

காவலர்களுக்குக் கிடைத்த கௌரவம்

இந்தத் திறப்பு விழாவில் மற்றொரு சிறப்பம்சமாக, நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு அரங்கேறியது. வழக்கமாக உயர் அதிகாரிகளோ அல்லது அரசியல் பிரமுகர்களோ ரிப்பன் வெட்டி அலுவலகத்தைத் தொடக்கி வைப்பார்கள். ஆனால், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் ஒரு முன்மாதிரியான முடிவை எடுத்தார்.

அந்த காவல் நிலையத்தில் நீண்ட ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆண் மற்றும் பெண் தலைமை காவலர்களைக் கொண்டே ரிப்பன் வெட்டி நிலையத்தைத் தொடக்கி வைக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி, மூத்த காவலர்கள் இருவரும் ரிப்பன் வெட்டி நிலையத்திற்குள் நுழைந்தனர். அதிகாரிகளின் இந்தச் செயல் அடிமட்ட காவலர்களைக் கௌரவிக்கும் விதமாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மேயர் மகாலட்சுமி, காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இயற்கையைப் பாதுகாப்பதிலும், பணியாளர்களை மதிப்பதிலும் இந்த புதிய காவல் நிலையம் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Roundup: இன்று திமுக நேர்காணல், குறைந்த தங்கம் விலை, ஈபிஎஸ் மீது ஒபிஎஸ் அட்டாக் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: இன்று திமுக நேர்காணல், குறைந்த தங்கம் விலை, ஈபிஎஸ் மீது ஒபிஎஸ் அட்டாக் - தமிழகத்தில் இதுவரை
Election Nomination Suvidha App : இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
போதைக்கு அடிமையான மகன் !! தந்தையின் கோபம் உச்சம் !! தூத்துக்குடியில் நடந்த கொடூரம்
போதைக்கு அடிமையான மகன் !! தந்தையின் கோபம் உச்சம் !! தூத்துக்குடியில் நடந்த கொடூரம்
Manickam Tagore: காங்கிரஸ் கட்சிக்குள் துரோகிகள்.. மாணிக்கம் தாகூர் பரபரப்பு குற்றச்சாட்டு!
Manickam Tagore: காங்கிரஸ் கட்சிக்குள் துரோகிகள்.. மாணிக்கம் தாகூர் பரபரப்பு குற்றச்சாட்டு!
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Nomination Suvidha App : இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
Trump Stunned by Iran: “ஈரான் இப்படி அடிப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல“: இவ்ளோ பவர் இருக்கா.? அலறிய ட்ரம்ப்
“ஈரான் இப்படி அடிப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல“: இவ்ளோ பவர் இருக்கா.? அலறிய ட்ரம்ப்
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
Gold rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை மீண்டும் குறைந்தது- ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை மீண்டும் குறைந்தது- ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
Honda 0 Alpha SUV: ஃபாரின்ல மூடினாலும், இந்தியால தொடங்கிட்டோம் - 0 ஆல்பா எஸ்யுவி டெஸ்டிங் ஸ்டார்ட் - பேட்டரி, விலை
Honda 0 Alpha SUV: ஃபாரின்ல மூடினாலும், இந்தியால தொடங்கிட்டோம் - 0 ஆல்பா எஸ்யுவி டெஸ்டிங் ஸ்டார்ட் - பேட்டரி, விலை
Embed widget