மேலும் அறிய

வேட்பாளராக அறிவிக்க வெல்லமண்டி நடராஜன் 5 லட்சம் லஞ்சம் கேட்டார் - அதிமுக வட்டச்செயலாளர் புகார்

திருச்சி மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு ரூபாய் 5 லட்சம் பேரம் பேசிய முன்னால் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் , அதிமுக வட்ட செயலாளர் பழனிச்சாமி குற்றச்சாட்டு

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் அதிமுக தனித்து போட்டியிடுவதாக தலைமைகழகம் அறிவித்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு இடபங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக முடிவு எட்டபட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சியில் 1 வார்டு ஓதுக்கீடு செய்யபட்டது.  இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி 51 வது வார்டு பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இதில் வருகின்ற தேர்தலில் அதிமுக சார்பாக வட்ட செயலாளர் பழனிச்சாமியின் மகள் திவ்யா என்ற இளம் பெண்ணுக்கு போட்டியிட வாய்ப்புகள் வழங்கபட்டது.

இந்நிலையில் திவ்யா வேட்புமனு தாக்கல் செய்வதற்குள்  51 வது வார்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மாற்றி கொடுக்கபட்டது. இதனால் திவ்யா அந்த வார்டில் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக வட்ட செயலாளர் பழனிச்சாமி  தன் மகள்  தேர்தலில் நிற்க ரூ. 5 லட்சம் ரூபாய்  அ.தி.மு.க முன்னால் அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன் கேட்டார், ஆனால்  பணம் கொடுக்க தாமதமானதால் தன் மகளுக்கு அ.தி.மு.க தலைமை ஒதுக்கிய வார்டை  கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினார் வெல்லமண்டி நடராஜன் என குற்றச்சாட்டு சாட்டியுள்ளார்.

வேட்பாளராக அறிவிக்க வெல்லமண்டி நடராஜன் 5 லட்சம் லஞ்சம்  கேட்டார் - அதிமுக வட்டச்செயலாளர் புகார்

மேலும்  வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 51 வது வார்டில்  அ.தி.மு.க வேட்பாளர் திவ்யாவிற்கு பதிலாக இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செங்கேணி என்பவர் போட்டியிடுவார் என திடீரென அறிவித்தது. இதில் மனமுடைந்து போன திவ்யா  த.மா.க வேட்பாளருக்கு எதிராக 51 வது வார்டில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் திவ்யாவின் தந்தையும் அ.தி.மு.க வின் 51 வது வார்டு வட்ட செயலாளருமான பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியது.. 1972 ஆம் ஆண்டு அ.தி.மு.க தொடங்கியது முதல் அக்கட்சியில் மட்டுமே இருந்து பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்துள்ளேன். எனது மகள் 51 வது வார்டில் போட்டியிடுவார் என அ.தி.மு.க தலைமை அறிவித்தது. இதற்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வந்து தர வேண்டும் என முன்னாள் சுற்றுலா துறை அமைச்சரும், அ.தி.மு.க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் வற்புறுத்தினார். அவர் கேட்ட நேரத்தில் அந்த பணம் என்னிடம் இல்லை. உடனடியாக வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து, உறவினர்களிடம் கடன் வாங்கி கொண்டு மறுநாள் காலை வெல்லமண்டி நடராஜனை சந்திக்க சென்றேன். காலதாமதமாக பணம் கொண்டு வந்ததை காரணம் காட்டி எனது மகளுக்கு ஒதுக்கிய வார்டை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி விட்டதாக அவர் கூறினார்.

வேட்பாளராக அறிவிக்க வெல்லமண்டி நடராஜன் 5 லட்சம் லஞ்சம்  கேட்டார் - அதிமுக வட்டச்செயலாளர் புகார்

தொடர்ந்து இது போல் தான் வெல்லமண்டி நடராஜன் செயல்பட்டு வருகிறார். கட்சியின் உண்மை தொண்டர்களை மதிக்காமல் இருக்கிறார். அவருடைய மகனுக்கு அவர் சீட் வழங்கி உள்ளார். அவர் மாவட்ட செயலாளராக இருக்கும் வரை கட்சி அழிந்து தான் போகும். எனவே வெல்லமண்டி நடராஜன் செயலை குறித்து முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் புகார் தெரிவிப்பேன். அவரை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கும் வரை ஓயமாட்டேன் என கூறினார். பின்னர் தரையில் இருந்த மண்ணை வாரி இறைத்து வெல்லமண்டி நடராஜனை அவர் சாபமிட்டார். மேலும் பணம் கொடுக்க தாமதமானதால் அ.தி.மு.க வில் கவுன்சிலர் சீட்டை மாற்றி வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Embed widget