மதுரையில் 9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ சத்யஜோதி, உதவியாளர் காந்தி கைது...!
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயன நோட்டுக்களை தடவி கொடுத்த நிலையில் பெண் வி.ஏ.ஓ சத்யஜோதி மற்றும் அவரது உதவியாளர் காந்தி ஆகியோர் கைது
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பனையூரை சேர்ந்த சோனை என்பவருக்கு சொந்தமான மூன்று வீடுகளை உறவினர்களுக்கு பிரித்து கொடுக்க பட்டா வாங்க விண்ணப்பம் செய்திருந்தார். இந்த நிலையில், ஒரு வீட்டிற்கு 3000 ரூபாய் என மூன்று வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய 9 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பனையூர் கிராம நிர்வாக அலுவலர் சத்தியஜோதி மற்றும் உதவியாளர் காந்தி கேட்டுள்ளனர்.
எனவே இதுகுறித்து சோனை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வி.ஏ.ஓ அலுவலகத்தில் ரசாயனம் தடவப்பட்ட லஞ்ச பணத்தை பெற்ற சத்யஜோதி மற்றும் உதவியாளர் காந்தி ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.
பேக் தயாரிக்கும் தொழில் செய்யும் நபரிடம் 10 லட்சத்தை பெண் இன்ஸ்பெக்டர் பிடிங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதியது. இந்நிலையில் பெண் வி.ஏ.ஓ லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியுள்ளார்.
திண்டுக்கல்லில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய மற்றொரு கிராம நிர்வாக அலுவலலர் கைது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வத்திபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னழகன் (28). விவசாயி. இவர், தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக சாத்தாம்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். அங்கு கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த தங்கவேல், பட்டா மாறுதல் செய்வதற்கு சின்னழகனிடம் 4 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் சின்னழகன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. எனவே இதுகுறித்து அவர், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தங்கவேலை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
கிராம நிர்வாக அலுவலர் கைது இதற்காக ரசாயன பவுடர் தடவிய 4 ஆயிரம் நோட்டுகளை சின்னழகனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அதன்பேரில் சின்னழகன், கோமனாம்பட்டியில் உள்ள கிளை அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் தங்கவேலுவிடம் 4 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று கையும் களவுமாக தங்கவேலை பிடித்து கைது செய்தனர். சமீபத்தில் இந்த சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !