சுருளி வனப்பகுதிக்குள் மீண்டும் வந்த காட்டு யானைகள் - சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை
வனப்பகுதிகளிலிருந்து சுருளி வனப்பகுதிக்குள் மீண்டும் வந்த காட்டு யானைகள் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை
தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக சுருளி அருவி விளங்குகிறது. தேனி மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், மூணாறு வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகளும் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர். சுருளி அருவி வனப்பகுதியில் உள்ளதால் அவ்வப்போது காட்டு யானைகள் அருவி பகுதிக்கு வருவது வழக்கம். அப்போது சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதிப்பார்கள்.
இந்தநிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக சுருளி அருவி பகுதிக்குள் நுழைந்தது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில் சுருளி அருவி பகுதிகளுக்குல் வந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிகளுக்குல் சென்றதால் அருவியில் குளிக்க வனத்துறை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 27ம் தேதி முதல் சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் , சுற்றுலாத்துறை சார்பாகவும்
சுருளி அருவியில் கடந்த 6 நாட்களாக சாரல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அருவியில் குளித்து செல்ல எவ்வித கட்டணம் இன்றி இலவசமாக வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இந்த நிலையில் நேற்று சுருளி அருவிப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் திடீரென்று முகாமிட்டு இருப்பதை வனத்துறையினர் கண்டனர். உடனே சுருளி அருவிக்கு செல்லும் பாதையை தடுப்புகள் வைத்து வனத்துறையினர் அடைத்தனர். யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் வரை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.