Tata Sierra: சியாரா டீசல் எடிஷன் தான் வேண்டும்..! டாடா டீலர்களை அலறவிடும் பயனர்கள் - மைலேஜ், விலை விவரங்கள்
Tata Sierra Diesel: டாடா சியாரா கார் மாடலுக்கான முன்பதிவில் பெட்ரோல் எடிஷனை காட்டிலும், டீசல் எடிஷனையே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tata Sierra Diesel: டாடா சியாரா கார் மாடலுக்கான முன்பதிவில் 55 சதவிகிதம் பேர், டீசல் எடிஷனையே தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.
சியாரா டீசல் எடிஷனை விரும்பும் பயனர்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய எஸ்யுவி ஆன சியாரா கார் மாடல், தொடக்க விலை அறிவிக்கப்பட்டு கடந்த நவம்பர் 25ம் தேதி விற்பனைக்கு வந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த காரானது, முதல் நாளிலேயே 70 யூனிட்களுக்கு முன்பதிவை பெற்றது. அதையடுத்து ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. டீலர்கள் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, மொத்த முன்பதிவு எண்ணிக்கையில் 55 சதவிகிதம் பேர் சியாரா டீசல் எடிஷனை தேர்வு செய்துள்ளனர். அதைதொடர்ந்து 25 சதவிகிதம் பேர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் எடிஷனையும், 20 சதவிகிதம் பேர் டர்போ பெட்ரோல் எடிஷனையும் தேர்வு செய்துள்ளனராம்.
சியாரா - வேரியண்ட்களுக்கான இன்ஜின் ஆப்ஷன்கள்
டாடா சியாரா காரானது ஸ்மார்ட்+, ப்யூர், ப்யூர்+, அட்வென்சர், அட்வென்சர்+, அக்கம்ப்ளிஸ்ட் மற்றும் அக்கம்ப்ளிஸ்ட் + என 7 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த அனைத்து வேரியண்ட்களிலும் 118bhp மற்றும் 260/280 Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. எண்ட்ரி லெவல் வேரியண்ட்களான ஸ்மார்ட்+ மற்றும் அட்வென்சர் டிரிம்களைத் தவிர, அனைத்து டீசல் ட்ரிம்களும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆனது, அதிகபட்சமாக 106bhp மற்றும் 145 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. ஸ்டேண்டர்டாக மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், ப்யூர், ப்யூர்+ மற்றும் அட்வென்சர் ட்ரிம்களில் DCA ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. டாப் எண்ட் அக்கம்ப்ளிஸ்ட் + ட்ரிம்மில் நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜின் ஆப்ஷன் இல்லை. 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது தனித்துவமாக ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் ஆனது அட்வென்சர்+, அக்கம்ப்ளிஸ்ட் மற்றும் அக்கம்ப்ளிஸ்ட்+ ட்ரிம்களில் கிடைக்கிறது.

டாடா சியாரா - வண்ண விருப்பங்கள்
டாடா சியாரா மொத்தம் 6 வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அந்தமான் அட்வென்சர், பெங்கால் ரோக், மூனாறு மிஸ்ட், ப்ரிஸ்டின் ஒய்ட், ப்யூர் க்ரே மற்றும் கூர்க் க்ளவுட். இந்த வண்ண விருப்பங்களானது வேரியண்ட் அடிப்படையில் மாறுபடுகிறது. அதேநேரம், டாப் 3 வேரியண்ட்களுக்கு 6 வண்ண விருப்பங்களும் கிடைக்கின்றன.

டாடா சியாரா - விலை, போட்டியாளர்கள்:
சியாரா எஸ்யுவியின் விலையானது ரூ.11.49 லட்சத்தில் தொடங்கி ரூ.21.29 லட்சம் வரை நீள்கிறது. டர்போ பெட்ரோல் வேரியண்ட்களின் விலையானது ரூ.17.99 லட்சத்தில் தொடங்குகிறது. டீசல் வேரியண்ட்களின் விலையானது ரூ.12.99 லட்சத்தில் தொடங்கி ரூ.21.29 லட்சம் வரை நீள்கிறது. சியாரா கார் மாடல்களின் விநியோகம் வரும் ஜனவரி 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. உள்ளூர் மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்டில் சியாரா மாடலானது நேரடியாக ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ், மாருதி விக்டோரிஸ் & க்ராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகன் ஆகியவற்றுடன் மோதுகிறது.





















