வயநாடு சுரங்கப் பாதை: கேரளாவில் பயண நேரம் குறையும், வளர்ச்சி அதிகரிக்கும்! விரைவில் தொடக்கம்
வயநாடு சுரங்கப் பாதை திட்டம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு முடிவடைந்து அனுமதிக்காக மத்திய வனத்துறையின் பரிசீலனையில் உள்ளது.
கேரள மாநிலத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் வயநாடு சுரங்கச் சாலை திட்டம் தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விரைவாக செயலாக்கப்பட உள்ளது. கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையான தமரச்சேரி மலைப்பாதையை மாற்றும் நோக்கில் இந்த புதிய சுரங்கம் உருவாக்கப்படுகிறது.
இந்த சாலை திட்டத்தின் மூலம் பயண நேரம் குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கப்படும் வகையில் இருக்கும். தற்போது 50 நிமிடம் நேரம் ஆகும் மலைப்பாதை பயணம் சுமார் 15 நிமிடங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் நிலச்சரிவு, வெள்ளம், வாகன நெரிசல் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தும் ஏற்படுவதால், சுரங்கம் கட்டும் தேவை பாதிப்பு இன்றி அதிகரித்து வருகிறது. சுரங்கம் அமைக்கப்படும் இடமானது கோழிக்கோடு – வயநாடு தமரச்சேரி மலை வழியாக, இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.2,400 கோடி ஆகும்.சுரங்கத்தின் நீளம் சுமார் 8.5 கிலோமீட்டர் ஆகும் இது தென் இந்தியாவின் நீளமான சுரங்களில் ஒன்றாகும். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் , கேரள அரசின் பொதுப்பணித்துறையும் இணைந்து இந்த பணியை மேற்கொள்கிறது.
கடந்த மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கேரள சட்டசபை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொதுப்பணித் துறை, KIIFB மற்றும் கொங்கன் ரயில்வே இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் இந்த சுரங்கப்பாதை கட்டப்படும். . மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் முன்பு இந்த சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்ற பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுரங்கம், குறிப்பாக மருத்துவ அவசரங்களில் மற்றும் வணிக போக்குவரத்து மேம்பாட்டிற்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக அமையும் என கூறப்ப்டுகிறது. மேலும் இதன் மூலம் மாநிலத்தின் வருவாய் அதிகரித்து பொருளாதாரத்திற்கு பயன் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயநாட்டில் உற்பத்தியாகும் விவசாயப் பொருட்கள், வாசனை மூலிகைகள், தேன், மிளகு போன்றவை விரைவில் கோழிக்கோடு மற்றும் தன்னிகரான மாநிலங்களில் கொண்டு செல்ல முடியும் என கூறப்படுகிறது. அதே சமயம் திட்டம் மேற்கொள்ளப்படும் இடம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் சுற்றுச்சூழல் மற்றும் வன அனுமதிகள் கிடைக்க வேண்டியது அவசியம். தற்போதைய நிலைப்படி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு முடிவடைந்து அனுமதிக்காக மத்திய வனத்துறையின் பரிசீலனையில் உள்ளது.
கேரளா சுரங்கம் கட்டப்பட்டால், அது கேரள மாநிலத்தின் உள்நாட்டு மற்றும் இடையிலான போக்குவரத்து நெடுகத் தளத்தில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரளத்தின் வளர்ச்சிப் பாதையில் இத்திட்டம் ஒரு முக்கியத்துவமான வரலாற்றுச் சாதனையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. பெங்களூரு மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்கு சரக்குகளின் பயணம் மற்றும் போக்குவரத்து மிகவும் வசதியாக மாறும் நிலையில் உள்ளது. இத்தனை வசதிகள் கொண்ட வயநாடு சுரங்கப்பாதை திட்டம் வருகிற ஜூலை மாதம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தால் தாமரச்சேரி கணவாயில் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனா்.





















