மேலும் அறிய

" நான் உங்களைப் போல் அல்ல, நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பவன்... பணிகளை தொடர அதிகாரம் உள்ளது - நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் காட்டம் !

திருப்பரங்குன்றம் வழக்கை விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளது. வழக்கை விசாரிக்க தடை இருந்தால் அதை நான் மதிப்பேன், உங்களை போல அல்ல.

வழக்கை விசாரிக்க தடை இருந்தால் அதை நான் மதிப்பேன், உங்களை போல அல்ல. நீதிமன்ற உத்தரவுகளை முறையாக மதிப்பவன் நான் ' தமிழக அரசு தரப்பிடம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு.

முருகன் முதல்படை வீடு  

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படைவீடு திருப்பரங்குன்றம். மதுரை மாநகரின் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் தென்மேற்கு திசையில் உள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வடக்கு முகம்பார்த்து அமைந்திருக்கிறது. சூர சம்ஹாரத்தை நிகழ்த்திக் காட்டி வாகைசூடி வந்த முருகனுக்கு தெய்வானையை திருமணம் முடித்துக் கொடுத்த இடமாகும். வீரன் முருகனின் வேலுக்கு மட்டும் அபிஷேகம் இங்கு மட்டும் நடப்பது சிறப்பானது.   எல்லா இடங்களிலும் அமர்ந்த நின்ற கோலத்தில் இருக்கும் முருகன் இங்கு தெய்வானையை மணந்த கோலத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். திருமண கோலத்தில் அருள் பாலிக்கும் முருகன் சுப்பிரமணிய சுவாமி எனும் நாமத்தால் அழைக்கப்படுகிறார். சுப்பிரமணியரின் அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி மேலே சூரியன் சந்திரன், கந்தகுகளும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே தன்னுடைய சிறப்பு வாகனமான யானையும், ஆடும் உள்ளது. இப்படி பல்வேறு சிறப்பு கொண்ட திருப்பரங்குன்றத்திற்கு சர்ச்சைகளும் பஞ்சமில்லாமல் மாறியுள்ளது.  

தீபத்தூண் பிரச்னை  

இந்தாண்டு  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக்கோரி ராம ரவிக்குமார் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி  மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதிலும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து பல்வேறு மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலி தொடர்ந்து இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக விசாரணையில் மலை உச்சியில் உள்ள தூணில் பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு நிறுத்தி வைக்கப்படும் என தனி நீதிபதி தெரிவித்திருந்தார்.  மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன    இந்நிலையில் தீபத்தூரில் தீபம் ஏற்ற உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கூறிய வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் ஜோதிராமன் அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தனர். தேவஸ்தானமே தீபத்தூணில் பூஜை செய்து இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாமே எனவும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இன்றைக்கும் விசாரணை வந்தது.

தமிழக அரசு தரப்பிடம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

'மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் தரப்பில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தனிநீதிபதியே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். அந்த உத்தரவும், நேற்றைய இடைக்கால தடை உத்தரவும் முரணாக இருக்க வாய்ப்பில்லை. திருப்பரங்குன்றம் வழக்கை விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளது. வழக்கை விசாரிக்க தடை இருந்தால் அதை நான் மதிப்பேன், உங்களை போல அல்ல. நீதிமன்ற உத்தரவுகளை முறையாக மதிப்பவன் நான் ' தமிழக அரசு தரப்பிடம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேச்சு

தலைப்பு செய்திகள்

பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget