மேலும் அறிய
Advertisement
Watch Video: தோட்ட பணியாளர் மர்ம மரணம் - கட்டுக்கட்டாக கிடந்த கள்ள நோட்டுகள் - மதுரையில் பரபரப்பு
கட்டுக்கட்டாக சிக்கிய 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகமான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து போலிசார் விசாரணை
மதுரை பேரையூர் அருகே உள்ளது சலுப்பபட்டி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் துவரிமானைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் கடந்த சில வருடங்களாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு இளங்கோவன் மர்மான முறையில் இறந்து கிடந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த சாப்டூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிமொழி தலைமையிலான காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
#abpnadu #madurai #case pic.twitter.com/adu3k08FLm
— Arunchinna (@iamarunchinna) December 24, 2021
பின்னர் தோட்டத்து உரிமையாளர் பாண்டியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தோட்டத்தில் கட்டுக்கட்டாக 10 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளும் 2 ஜெராக்ஸ் மெஷின்களும் இருந்தது தெரிய வந்தது.
மேலும் இந்த கள்ள நோட்டுகள் பதுக்கல் தொடர்பாக பாண்டியை கைது செய்த போலீசார் இந்த கள்ள நோட்டு அச்சடித்து வெளியிட்டது தொடர்பாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா எனவும், இறந்து கிடந்த இளங்கோவன் இயற்கையாக இறந்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Abpnadu #madurai மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இறந்தவரின் உடலை சக காவலர்களுடன் இணைந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கனிமொழி - க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. pic.twitter.com/9zYQylRIOF
— Arunchinna (@iamarunchinna) December 24, 2021
இந்நிலையில் இறந்தவரின் உடலை சக காவலர்களுடன் இணைந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கனிமொழிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion