மேலும் அறிய

விருதுநகரில் விண்ணை பிளந்த சத்தம், நிலநடுக்கம் போல் அதிர்வு ஏற்பட்டது ஏன் ? - ஆட்சியர் விளக்கம்

வீடுகளில் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதிகாலையில் பயங்கரமாக வெடித்த பட்டாசுகள் கண்ணாடி உள்ளிட்ட லேசான பொருட்கள் எல்லாம் கீழே விழுந்துள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதியில் இயங்கும் பட்டாசு ஆலை
 
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் தட்பவெப்ப நிலையின் காரணமாக தொடர்ந்து இங்கு பட்டாசு ஆலைகள் அதிகளவில் செயல்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தரமாக இருக்கும் என்பதால் பல்வேறு இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தீபாவளிக்கு அதிகமாக பயன்படுத்தும் பட்டாசுகள் இங்குதான் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சாத்தூர் பகுதியில் இயங்கிய பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதால் விண்ணை பிளப்பது போல் சத்தமும், நிலநடுக்கம் போன்ற உணர்வு ஏற்பட்டு பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சாத்தூர் பட்டாசு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்துள்ளார்.
 
தீபாவளி நெருங்கும் சமயத்தில் பட்டாசு வெடி விபத்து
 
சாத்தூர் அருகே உள்ள சித்தப்பள்ளி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் தீபாவளிக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்க தயாராக இருந்த இருப்பு அறையில் பட்டாசுகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உராய்வு காரணமாக பட்டாசு விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வெடி விபத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 15 கிலோ மீட்டருக்கும் மேல் அதிர்வு காணப்பட்டதாக உறுதியான தகவல் கிடைத்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டு சுற்று வட்டார பகுதிகள் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சில தகவல்களை தெரிவித்துள்ளார். 
 
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்
 
இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் ஜெயசீலன் தெரிவிக்கையில், "விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்பள்ளி எனும் கிராமத்தில் செயல்பட்டு வரும் திருமுருகன் ஃபயர் ஒர்க்ஸ் நிறுவத்தில் இன்று அதிகாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அதிகாலை என்பதால் யாரும் அங்கு பணியாளர்கள் இல்லை. எனினும் லோடு ஏற்றுவதற்காக லாரி ஒன்று அங்கு வந்துள்ளது. அதனால் சிறிய தீப்பொறி ஏற்பட்டு வெடி விபத்து  ஏற்பட்டிருக்கலாம், என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த திருமுருகன் ஃபயர் ஒர்க்ஸ் அனுமதி பெற்று செயல்படக்கூடிய நிறுவனமாகும். இங்கு பணியாளர்கள் யாரும் அந்த சமயத்தில் இல்லை என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. வந்த லாரி ஓட்டுநரும் அங்கிருந்து உடனடியாக தப்பித்துவிட்டார். பட்டாசு விபத்தில் சம்மந்தப்பட்ட லாரியும் விபத்தில் சிக்கியது. எனினும் தீ விபத்தினால் அங்குள்ள ஆறு அறைகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. தீயணைப்பு துறையினர் முழுமையாக தீயிணை  கட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர். இந்த வெடி விபத்தின் காரணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள 25 க்கு மேற்பட்ட வீடுகளில் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள்  இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கான பணிகள் நடைபெற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.
 
 

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!
சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
மதுரை மீனாட்சி கும்பாபிஷேகம்: பக்தர்கள் வசதிகளுக்கான பணிகள் தீவிரம் !
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget