’விருதுநகர் மாணவர்களே - TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி’ இதோ விவரம்..!
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மின்னஞ்சல் முகவரி மூலம் அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 13.09.2025 மற்றும் 20.09.2025 ஆகிய நாட்கள் நடைபெற உள்ளது - என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தகவல்.
மாநில அளவிலான மாதிரி தேர்வுகள்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 645 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி - II/IIA (குரூப் II/IIA) தேர்வு வரும் 28.09.2025 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின், தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 13.09.2025, 20.09.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரியில் நடைபெற உள்ளது.
நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்
இந்த மாதிரித் தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் வாயிலாக https://forms.gle/





















