மேலும் அறிய
Advertisement
Vande Bharat: வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியிலும் நிறுத்துங்க! குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர்!
சென்னை முதல் நெல்லை வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வேண்டியும், நெல்லை வரை நீட்டிப்பு செய்ய இருக்கும் மதுரை பெங்களூர் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வேண்டும்.
நெல்லை வரை செல்லும் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்
தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வஸ்தவா அவர்களை நேரில் சந்தித்து கோவில்பட்டி தொகுதியில் உள்ள மக்களின் கோரிக்கையை நிறைவேற்று தருமாறு கோரிக்கை மனு வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது..,”அதிகமாக ரயில் பயணம் பயன்படுத்தும் நிலையமாக கோவில்பட்டி ரயில்வே நிலையம் உள்ளது. கோவில்பட்டி தொகுதி மக்கள் மட்டுமல்லாது அருகே உள்ள விளாத்திகுளம் தொகுதி, ஒட்டப்பிடாரம் தொகுதி, சங்கரன்கோவில் தொகுதி, சாத்தூர் தொகுதி என ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள், ஆகவே கோவில்பட்டி ரயில்வே நிலையம் முக்கியமான ரயில் நிலையமாக மக்களுக்கு பயன்பாடாக இருந்து வருகிறது.
அதிகமான மக்கள் பயனடைகிறார்கள்
கொரோனா காலத்திற்கு முன்பாக பல ரயில்கள் நின்று சென்றன, ஆனால் கொரோனா காலத்திற்கு பின்பு பல ரயில்கள் நிறுத்தப்படாத நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு நவம்பர் 17ஆம் தேதி டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து பல கோரிக்கை வைத்தேன், அதில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் லிப்ட், தானியங்கி இயந்திரம், பேட்டரி கார் உட்பட பயணிகள் நலன் குறித்து கோரிக்கை வைத்தேன், அந்த அடிப்படையில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி ரயில்வே நிலையத்திற்கு பல கோடி மதிப்பில் பல நவீன மயமாக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை முதல் நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தப்பட வேண்டும் என்று, சென்னையில் உள்ள தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து கோரிக்கை வைத்தேன் இதனை தொடர்ந்து எனது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தம் செய்யப்பட்டது, இதனால் அதிகமான மக்கள் பயனடைகிறார்கள்.
அதன் அடிப்படையில் தற்போது சென்னை முதல் நெல்லை வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வேண்டியும், மதுரை முதல் பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் நெல்லை வரை நீட்டிப்பு செய்ய இருப்பதாக தகவல் வருகிறது. ஆகவே இந்த ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். இதனை தொடர்ந்து இதை கனிவோடு பரிசீலனை செய்யப்படும் என்று மதுரை கோட்ட மேலாளர் கூறினார். கோவில்பட்டி நகரத்தில் மூன்று மேம்பாலங்கள் உள்ளது. இதில் இரண்டு மேம்பாலங்கள் மற்றொன்று சுரங்கப்பாதை சப்வே உள்ளது. இது, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாத வகையில் உள்ளது.
தானியங்கி மோட்டாரர் வேண்டும்
ஆகவே இதற்கு மேற்கூரை அமைக்க வேண்டும் அப்போதுதான் மழைக்காலங்களில் தண்ணீர் புகாமல் தடுக்க முடியும் என்று மனுவாக கூறினேன். கடம்பூர் ரயில் நிலைய அருகே 452, 456 ஆகிய இரண்டு சுரங்கப்பாதை உள்ளது மழைக்காலம் மட்டுமல்லது, ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது, ஒரு சுரங்கப்பாதையில் பக்கத்தில் ரயில்வே கல் குவாரி இருப்பதாலும், மற்றொன்று சங்கராபேரி சுரங்கப்பாதை அருகே கண்மாய் இருப்பதால் தண்ணீர் தேக்கம் உள்ளது. இதனால் சுரங்கப்பாதையை மக்கள் பயன்படுத்த முடியாமல் ரயில்வே தண்டவாளம் கடந்து ஊருக்கு செல்வதால் விபத்து போன்ற நிலை ஏற்படுகிறது, ஆகவே இந்த தண்ணீரை அப்புறப்படுத்த வகையில் தானியங்கி மோட்டார் வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஜோதிடம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion