அதிவேகத்தில் வந்து மின்னல் வேகத்தில் சென்ற 'வந்தே பாரத்' - ஆர்வத்துடன் பார்த்த திண்டுக்கல் மக்கள்
அதிவேகத்தில் வந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்ற வந்தே பாரத் ரயிலை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்தனர்.
சென்னை - நெல்லை இடையே நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ஊர்களில் நின்று செல்கிறது. சென்னையில் இருந்து வரும்போது இரவு 7.55 மணிக்கும், நெல்லையில் இருந்து வரும்போது காலை 8.40 மணிக்கும் திண்டுக்கல்லுக்கு வந்தே பாரத் ரயில் வருகிறது. இதற்கிடையே சென்னை, நெல்லை இடையே நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. அப்போது திண்டுக்கல் உள்பட அனைத்து ஊர்களிலும் வந்தே பாரத் ரயிலை மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். இதற்கிடையே நேற்றும் நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
CM MK Stalin Podcast: 5C கட்சி மோடியின் பா.ஜ.க.. முதல்வர் ஸ்டாலின் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு..
இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு வந்தே பாரத் ரயில் காலை 8.50 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தது. திண்டுக்கல்லில் 2-வது நடை மேடையில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. இதையொட்டி ரயில்வே அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் ரயிலை பார்வையிட்டனர். அதேபோல் ரயிலில் வந்த அதிகாரிகள், இறங்கி நடைமேடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதேநேரம் பிற ரயில்களில் செல்வதற்கு காத்திருந்த பயணிகள், ரயில் நிலையத்துக்கு வெளியே நின்ற மக்கள் வந்தே பாரத் ரயிலை ஆர்வமுடன் பார்த்தனர். மேலும் பெண்கள் உள்பட அனைவரும் ரயிலுடன் நின்று செல்பி எடுத்தனர். அதேபோல் செல்போனில் வந்தே பாரத் ரயிலை புகைப்படம், வீடியோ எடுத்தனர். இதையடுத்து 8.52 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு சென்றது. அதிவேகத்தில் வந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்ற வந்தே பாரத் ரயிலை அனைவரும் ஆர்வத்துடன் பார்த்தனர்.