Vaigai Dam: வைகை அணையிலிருந்து மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக நீர் திறப்பு
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் பெரியார் பாசன பகுதிகளுக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலமாக மதுரை ,ராமநாதபுரம் ,திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்தும் நீர் பாசனம் பெறுகின்றது. இந்த அணை மொத்தம் 71 அடி உயரம் கொண்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் சமயத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும். அப்போது அணை நிரம்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் வைகை அணை அமைந்துள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொறுத்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிக தீவிரம் அடைந்ததால் அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது.
Purattasi 2024: பக்தர்களே! புரட்டாசி மாதம் ஏன் பெருமாளுக்கு மிகவும் உகந்தது? இதுதான் காரணம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கிய நிலையில் 65 அடியை நெருங்கியதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு அணை நிரம்பும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர், ஆனால் திடீரென மழையின் அளவு குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. அதனால் விவசாய தேவைக்கு தண்ணீர் திறக்கவில்லை மதுரை மாநகராட்சி குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து 969 கன அடி நீர் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவை கண்டதால் விவசாயிகள் பாசன வசதிக்கு தண்ணீர் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்தனர்.
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
தற்போது அணையின் நீர்மட்டம் 61.29 அடியாக உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 5௦1 கன அடி அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் திறப்பு வினாடிக்கு 69 கன அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 3854 மில்லியன் கன அடியாக உள்ளது.இந்நிலையில் விவசாயிகள் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தமிழக அரசு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. வைகை அணையில் இருந்து நேற்று முதல் அடுத்த 120 நாட்களுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தின் பெரியார் பாசன பகுதிகளுக்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வினாடிக்கு 1130 கன அடி வீதம் 120 நாட்களுக்கு 80461 மில்லியன் கன அடி நீர்திறக்க திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த 120 நாட்களுக்கு பெரியார் பிரதான கால்வாய் மூலம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் சமயத்தில் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படும், அப்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுமா என எதிர்பார்ப்பில் உள்ளனர்.