உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாயில் நீரை திறக்க நடவடிக்கை - எம்.எல்.ஏ., கோரிக்கை மனு
தமிழ்நாடு அரசு விரைவில் 58 கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாக இருந்த போதும், அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் போது முழு கொள்ளளவை எட்டியதாக கணக்கிடப்படுகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை ஆறு, முல்லைப்பெரியாறு கொட்டக்குடி ஆறு-ஆகிய ஆறுகளில் இருந்து அதிகப்படியான நீர்வரத்தால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் தேனி,மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்படுவதாக நீர்வளத்துறையினர் அறிவித்தனர். இந்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் இன்று 69 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாயில் நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை உசிலம்பட்டி கோட்டாச்சியரிடம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.
RAINFALL REPORT
District : Madurai
Date : 09/11/2023
Total No.of Rainguage Stations -- 22.
District Rainfall in mm - 964.30
Average Rainfall in mm - 43.83
1) Airport Madurai -- 32.40
2) Viraganur -- 20.00
3) Madurai North - 27.50
4) Chittampatti -- 45.80
5) Idayapatti -- 70.00
6) Kallandiri -- 42.00
7) Tallakulam -- 41.00
8) Melur -- 79.50
9) Pulipatti -- 52.20
10) Thaniyamangalam -- 52.00
11)Sathiyar dam -- 55.00
12)Mettupatti --- 36.40
13)Andipatti -- 35.60
14)Sholavandhan -- 25.50
15)Vadipatti -- 43.00
16)Usilampatti -- 37.00
17)Kuppanampatti -- 22.00
18)Kalligudi -- 60.20
19)Tirumangalam -- 55.20
20)Peraiyur -- 37.00
21)Elumalai -- 60.80
22)Periyapatti -- 34.20
RESERVOIR POSITION
TOTAL FEET 152.00 ft
PERIYAR DAM 128.40 ft
STORAGE 4352 Mcft
INFLOW 2230 C/s
DISCHARGE 105 C/s
TOTAL FEET 71.00 ft
VAIGAI DAM 69.85 ft
STORAGE 5787 Mcft
INFLOW 2705 C/s
DISCHARGE 69 C/s
TOTAL FEET 29.00 ft
SATHIYAR DAM 22.80 ft
STORAGE 35.19 Mcft
INFLOW 27.00 C/s
DISCHARGE 0.00 C/s